தமிழகத்தில் சனாதன தர்மம் பற்றி பேசும் பவன் கல்யாண்.. ஆனால் திருப்பதியில் .. ரோஜா கடும் தாக்கு
திருப்பதி: சனாதன தர்மத்தை காப்பாற்ற வந்த பீடாதிபதி போல தன்னைத்தானே காட்டிக் கொண்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திருமலையில் பசுக்களைகூட காப்பாற்ற முடியாத நிலையில் ஆந்திர அரசாங்கம் இருப்பதை வேடிக்கை பார்க்கிறார். இவர் தான் தமிழ்நாட்டில் போய் சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார் என்று நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான ரோஜா செல்வமணி விமர்சித்தார்.
நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான ஜெகன்மோகன்ரெட்டி அண்மைக்காலங்களில் சனாதான தர்மம் பற்றி அதிகம் பேசி வருகிறார். திருப்பதி நெய் கலப்பட விவகாரம் தொடங்கி, தமிழ்நாட்டில் முருகன் கோவில்களுக்கு சுற்றுப்பயணம், மதுரை முருகன் மாநாட்டில் பேச்சு என்று சனாதனம் பற்றி முழு வீச்சாக பேசி வருகிறார். அதேநேரம் ஆந்திராவில் முன்பு ஆளும் கட்சியாகவும், இப்போது எதிர்க்கட்சியாகவும் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பவன் கல்யாண் தாக்கு
அண்மையில் ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டம், நரசிம்மாபுரத்தில் குடிநீர் திட்டத்துக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் நாட்டினார்.அப்போது பவன் கல்யாண் பேசுகையில் 2029-ல் ஆட்சிக்கு வந்ததும் எங்களை ஒரு கை பார்ப்போம் என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அடிக்கடி மிரட்டி வருகிறார். சக மனிதர்களை இவ்வாறு மிரட்டியதால்தான் தனக்கு இந்த நிலைமை என்பதை ஜெகன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்ட நிதியை முந்தைய ஜெகன் அரசு முறையாக பயன்படுத்தவில்லை.
ஜெகன் கட்சியினர்
மத்திய அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.1,290 கோடியில் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைவார்கள். இங்குள்ள லட்சுமி சென்னகேசவுலு கோயில் உட்பட பல்வேறு கோயில்களின் நிலங்களை ஜெகன் ஆட்சியில் அவரது கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த நிலங்களை மீட்க தனி கமிட்டி அமைக்கப்படும். அதன் மூலம் கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்" என்று கூறினார்.
ரோஜா பதிலடி
இதனிடையே பவன் கல்யாணுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான ரோஜா செல்வமணி நேற்று பேசியிருக்கிறார். ஆந்திர மாநிலம் நகரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் 'ரீ கால் சந்திரபாபுநாயுடு' என்ற பிரசார நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகையும், முன்னாள் மந்திரியுமான ரோஜா கலந்துகொண்டார்.
சந்திரபாபு நாயுடு மீது தாக்கு
அப்போது ரோஜா செல்வமணி பேசுகையில், "தேர்தலில் அமல்படுத்த முடியாத வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு இப்பொழுது திட்டங்கள் அமல்படுத்துவதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று அப்பாவியாக வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு நடிகையான என்னை விட அவர் சிறப்பாக நடிக்கிறார். அவருக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்.
தமிழ்நாட்டில் சனாதனம்
சனாதன தர்மத்தை காப்பாற்ற வந்த பீடாதிபதி போல தன்னைத்தானே காட்டிக் கொண்ட துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதி திருமலையில் பசுக்களைகூட காப்பாற்ற முடியாத நிலையில், சந்திரபாபு நாயுடுவின் அரசு இருப்பதை வேடிக்கை பார்க்கிறார். இவர் தமிழ்நாட்டில் போய் சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார். பவன் கல்யாண் தனது படங்களை நடித்து முடித்து வெளியிடுவதில் மும்முரமாக இருக்கிறார். மக்கள் பிரச்சனைகளை பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது" இவ்வாறு ரோஜா செல்வமணி விமர்சித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications