லட்டுனு சொல்லி அல்வாவை கொடுத்து! நாமத்தை போட்டு! விரதம் இருக்கீங்களா பவன்? சீறிய சீரியல் நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லட்டு பெயரில் ஆந்திர அரசு, நமக்கு நாமத்தை போட்டுவிட்டு விரதம் இருப்பதாக சொல்லிய துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறார் என சீரியல் நடிகர் அருண் ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். தவறே செய்யாமல் நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்ட நிலையில் அருண் ராஜன் தைரியமாக பேசியதை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து சீரியல் நடிகர் அருண் ராஜன் கூறியிருப்பதாவது: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டதாக வந்த அறிக்கையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

tirupati spirtuality laddu

திருப்பதி என்பது இந்துக்களுக்கு மட்டுமில்லை, தெலுங்கு பேசும் மக்களுக்கு மட்டுமில்லை, ஆந்திரா மக்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்குமே ஒரு வீடு என சொல்லலாம். நமக்கு ஏதாவது பிரச்சினை, அந்த பிரச்சினை தீர வேண்டுதல் வைக்க வேண்டும் என்றால் உடனே கிளம்பி போகும் இடம் திருப்பதி.

இந்த பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருக்கிறத என்பதை எத்தனை சர்ச்சைக்குரியதோ, இதை எல்லாம் தடுக்க வேண்டிய, நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் எதுவுமே செய்யாமல், இப்படி ஒரு விஷயம் நடந்ததற்கு அப்புறம் இதை கேள்வி கேட்கும் மக்களை திமிராக பதில் கேட்கிறார்கள் அரசியல்வாதிகள்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பவன் கல்யாண், ஆந்திரா துணை முதல்வர்! மெய்யழகன் ஆடியோ லாஞ்சில் நடிகர் கார்த்தி பேசிய வீடியோவை நான் பார்த்தேன். அவர் எதுவுமே தவறாக பேசியதாக தெரியவில்லை. இந்த லட்டு பற்றி பேச வேண்டாம் என பொதுவாகத்தான் பேசியிருந்தார்.

அதற்கு பவன் கல்யாணின் வீடியோவை பார்த்திருந்தால் தெரியும். அவர் பேசுகையில் " லட்டு குறித்து காமெடி செய்கிறீர்களா, லட்டு எப்படி சர்ச்சைக்குரிய பிரச்சினை என நீங்கள் சொல்லலாம். அதை ஒரு போதும் சொல்லாதீர்கள். அதை சொல்ல துணியாதீர்கள் " என பேசியுள்ளார்.

இதென்ன அவர் வீட்டில் நடக்கும் பிரச்சினையா, பொது பிரச்சினை! திருப்பதிக்கு நேர்த்தியுடன் விரதமிருந்து, சுவாமி தரிசனம் செய்து லட்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட்ட எங்கள் எல்லாருக்குமே பெரிய நாமத்தை போட்டு விட்டிருக்கிறீர்கள். இவ்வளவு ஏன் பெரிய ஏமாற்று வேலையை செய்துள்ளீர்கள். அப்படி என்கிற போது நாங்கள் கேள்வி கேட்கத்தான் செய்வோம்.

நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இதை குறித்து பேசக் கூடாது என்றெல்லாம் நீங்கள் (பவன்) சொல்லக் கூடாது. கார்த்தி எதற்காக மன்னிப்பு கேட்டார் என தெரியவில்லை. அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை. மொத்த இந்துக்களுக்குமே லட்டு என்கிற பெயரில் அல்வாவை கொடுத்துவிட்டு எல்லாரையும் ஏமாற்றிவிட்டு "நீங்கள் அவர்கள் மீது தவறு, இவர்கள் மீது தவறு, கேள்வி கேட்கக் கூடிய இடத்தில் இருந்தும் நான் கேட்கவில்லை, நான் விரதமிருக்க போகிறேன் என அரசியல் செய்கிறார்.

தெலுங்கு பேசும் மக்கள் எல்லாருமே நீங்கள் இதை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இந்த டாப்பிக்கை வைத்து அரசியல் செய்கிறார்கள். இந்த ஏமாற்று வேலைக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? நாங்கள் விரதமிருந்ததற்கான அர்த்தம் என்ன, நாங்கள் பிரசாதம் என நம்பி சாப்பிட்ட இந்த மாமிச கொழுப்புக்கு யார் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்ற கேள்விக்கு ஆந்திர அரசியல்வாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

குறிப்பாக பவன் கல்யாண் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இந்த விஷயத்தை பெருசாக்கினாலும் பரவாயில்லை. எங்களுக்கு பதில் சொல்லுங்கள். கேள்வி கேட்போரை நீங்கள் வாயடைக்க முடியாது. இவ்வாறு அருண் ராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+