பிரதமர் பதவி பறிபோகும் அச்சம்..திருப்பதி ஏழுமலையானிடம் மகிந்த ராஜபக்சே தஞ்சம்!
திருப்பதி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று 2 நாட்கள் பயணமாக தமது குடும்பத்தினருடன் திருப்பதி வருகை தந்துள்ளார். பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நீக்கப்படலாம் என்கிற தகவல்கள் வலம் வரும் நிலையில் அவர் திருப்பதி வருகை தந்துள்ளார்.
இலங்கையில் அதிபராக கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே பதவியில் உள்ளனர். மேலும் பசில் ராஜபக்சே, மகிந்த மகன் நாமல் ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அமைச்சர்களாக, அதிகாரமிக்க பதவிகளில் இருந்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக மகிந்த ராஜ்பக்சே, பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்படலாம்; அவருக்கு பதில் பசில் ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்படலாம் என்கின்ற தகவல்கள் வலம் வருகின்றன. இதனால் மகிந்த ராஜபக்சே கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பின்னணியில் இன்று திடீரென 2 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார் மகிந்த ராஜபக்சே. திருப்பதிக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த மகிந்த ராஜபக்சேவை ஆந்திரா துணை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அம்மாநில குழுவினர் வரவேற்றனர்.

இன்று இரவு திருப்பதியில் தமது குடும்பத்தினருடன் மகிந்த ராஜபக்சே தங்குகிறார். பின்னர் நாளை காலை திருப்பதி கோவிலில் மகிந்த ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். மகிந்த ராஜபக்சேவின் வருகையை ஒட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications