திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்.. ஆய்வில் உறுதி! பக்தர்கள் ஷாக்
திருப்பதி: திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் வழங்கப்படும் லட்டில், ஜகன்மோகன் ரெட்டி ஆட்சியில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருந்தார். இதனையடுத்து லட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர அமைச்சருமான நர லோகேஷ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். வீடியோவில் "திருமலையில் உள்ள கடவுள் ஏழுமலையான் கோவில் புனிதம் வாய்ந்த கோவில். இதற்கு முன் இருந்த ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் நிர்வாகத்தின்போது, திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒய்.எஸ். ஜெகன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைத்து வெட்கப்படுகிறேன். இதனைச் சரிசெய்ய வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை" என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், லட்டுக்கள் சோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன. சோதனை முடிவுகள் குறித்து, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள கால்நடை மற்றும் உணவு ஆய்வு மையத்தின் (CALF) ஆய்வகம் விளக்கமாக அறிக்கை அளித்திருக்கிறது.

இதில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவை லட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமின்றி, சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ் மற்றும் பல காய்கறிகளின் எண்ணெய் கொழுப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications