திருப்பதி திருமலைக்கு முதல்முறை சென்று வந்த பக்தரின் அனுபவம்! புதிதாக செல்வோர் நோட் செய்யுங்கள்
திருப்பதி: திருமலையில் வாழும் ஏழுமலையானை தரிசனம் செய்ய, சென்ற பக்தர்களிடையே திருப்பதி நகரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மூச்சு திணறி சேலத்தை சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, ஆன்லைனில் டோக்கன் எடுப்பது, திருப்பதியில் டோக்கன்கள் தருவது என எதுவுமே தெரியாமல், சமீபத்தில், முதல் முறையாக திருப்பதி சென்ற ஒரு பக்தர், தனது கருத்துக்களை "ஒன்இந்தியாதமிழுடன்" பகிர்ந்து கொண்டார்.
அவரின் அனுபவமும், பக்தர்களுக்கு உதவ, அரசும், தேவஸ்தானம் போர்டும் புதிதாக, என்ன செய்யலாம் என்பது பற்றிய அவரது கருத்தும் இதோ..

திருப்பதி என்பது ஒரு நகரம். ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ள திருமலைக்கும் இடையே 22 கி.மீ தூரம் உள்ளது. இதுவே தெரியாமல்தான்தான் நான் திருப்பதி போயிருந்தேன். திருப்பதிக்கு போன பிறகு அங்குள்ள ஹோட்டல் ஒன்றின் செக்யூரிட்டியிடம், இன்று கூட்டம் இருக்குமா அல்லது கோவிலுக்கு போக முடியுமா என கேட்டேன். அவரும், கூட்டமெல்லாம் இல்லைங்க, கோயிலுக்கு போகலாம்னு சொன்னார். ஆனால், டோக்கன் தருவார்கள், பாலாஜி பஸ் நிலையத்தில் அதற்கு கவுண்டர் இருக்கும். அங்கு சர்வ தரிசன டோக்கன் வாங்கிவிட்டு போங்க எனக் கூறினார். அவர் கூறும்போது மதியம் 1 மணி.
பாலாஜி பஸ் நிலையம் போய் பார்த்தால், விடியற்காலம் 5 மணிக்கெல்லாம் டோக்கன் கொடுக்க ஆரம்பித்து குறிப்பிட்ட எண்ணிக்கையை கடந்ததும் டோக்கன் நிறுத்தப்பட்டு அப்பவே ஊழியர்கள் போயாச்சு, நீங்கள் மதியம் வந்துள்ளீர்களே என்று அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கேட்டார்கள். அடடே இதுவே நமக்கு இப்போதான் தெரியுதே என நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் ஹோட்டல் செக்யூரிட்டி சொன்னது காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. கூட்டம் இல்லை என்கிறாரே, சரி டோக்கன் எடுக்காமலே திருமலை ஏறிவிட வேண்டியதுதான். எப்படியும் சுவாமி தரிசனம் செய்துவிடலாம் என நினைத்து, காரை கிளப்பி திருமலை நோக்கி பயணிக்க தொடங்கினேன்.
சற்று நேரத்திலேயே, திருப்பதியை கடந்ததும் ஒரு செக்போஸ்ட் வந்தது. திருமலை போகும் வாகனங்கள், பக்தர்களின் உடமைகளை பாதுகாப்பு பரிசோதனை செய்யும் இடம் அது.
மலை ஏறும் முன்பு ஒருமுறை உறுதி செய்துகொள்ளலாம் என நினைத்து செக் போஸ்ட் ஊழியர்களிடம் கூட்டம் குறித்து கேட்டேன். சிலர் கூட்டம் குறைவு என்றனர். சிலர் கொஞ்சம் கூட்டம்தான் என்றனர். சில போலீசாரிடம் கேட்டால், எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். யாருமே தெளிவாக, உறுதியாக எதையும் சொல்லவில்லை. ஏனெனில் அங்கு யாருக்குமே அந்த விவரம் தெரியவில்லை.
அப்போதும், கூட்டம் கம்மின்னு அந்த செக்யூரிட்டி பெரியவர் சொல்லிருக்காரு, அவருக்கு திருப்பதியில் எவ்வளவு அனுபவம் இருக்கும் என நினைத்துக்கொண்டேன். சட்டென முடிவெடுத்து, திருமலை மலைப்பாதையில் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்துவிட்டேன். குடும்பத்தினரும் மலையின் எழிலை பார்த்தபடி குதுகலமாக வந்தனர்.
திருமலையில் கோவிலுக்கு சற்று தூரத்தில் கார் பார்க்கிங் செய்துவிட்டு இறங்கினோம். அருகே ஒரு டெம்போ டிராவலர் நின்றது. அதன் டிரைவரிடம் சார், கோவிலில் கூட்டம் இல்லையாமே இப்போ போனால் எப்போ வரலாம் என கேட்டேன். பதிலுக்கு அவர் பரந்தாமன் போலவே சிரித்துக்கொண்டு, நான் கூட்டி வந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்குள் போய் 2 நாளாச்சு, வந்த பிறகு வண்டியை கிளப்பலாம் என்று காத்திருக்கிறேன் என்றார். முதலில் கொஞ்ச நேரம் காதுகளையே நம்ப முடியவில்லை என்றபோதிலும், சும்மா கலாய்க்கிறார் போல, நாம "ஏமாறக் கூடாது" என முடிவு செய்து, கோவில் எங்கே இருக்கிறது என கேட்டபடி நடக்க ஆரம்பித்தோம்.
பார்க்கிங் ஏரியாவை சுற்றிலும் சில தமிழர்கள் கடை வைத்திருந்தனர். அவர்களிடம் கேட்டால், கோவிலில் சரியான கூட்டமுங்க, டோக்கன் கொடுக்க ஆரம்பித்ததுமே முடிந்துவிட்டது. ஆன்லைனில் 3 மாதம் முன்பே புக் செய்துவிட்டு வாங்க. இப்போ கோவிலுக்குள் போனால் 8 மணி நேரம் கூட ஆகலாம் என வரிசையாக சொன்னார்கள். நம்பாமல் கோவில் வாசல் வரை கூட போய் அங்குள்ள கடைக்காரர்களிடமும் கேட்டுப்பார்த்தோம், அதே பதில்தான்.
அதேநேரம், காத்திருப்பு பகுதிக்குள் போய்விட்டால், தேவைப்படும்போது சாப்பாடு, தண்ணீர் வந்துவிடும், கழிவறை வசதிகளும் உள்ளன. கவலையில்லை என்றும் சொன்னார்கள். அடுத்ததாக போக வேண்டிய கோவில் பயணம் தாமதமாகிவிடும் என்பதால் கோவில் கோபுரத்தை பார்த்து சாஸ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, அடுத்த முறை தரிசனம் செய்ய "அருள்தா பாண்டுரங்கா" என வேண்டிக்கொண்டு கிளம்பினோம். வரும் வழியில் அந்த ஹோட்டல் செக்யூரிட்டியைதான் பார்க்க முடியவில்லை.
சரி செய்ய வேண்டியது:
திருப்பதிக்கு புதிதாக ஒருவர் போனால் தரிசன டோக்கன் எங்கே கிடைக்கும் என்ற அறிவிப்பு பலகைகள் கண்ணில் படுவதில்லை, திருமலைக்கு டோக்கன் வாங்காமலே மலையேறிச் செல்லலாமா, கூட்டம் எந்த அளவுக்கு உள்ளது, எத்தனை பேர் திருமலை போயுள்ளார்கள் என்ற தகவல் எங்குமே இல்லை. மலைமீது ஏறி கோவிலுக்கு அருகே செல்லும்போதுதான் அங்குள்ள கடை வைத்திருப்பவர்கள் மூலம் கூட்டம் இருக்கிறதா இல்லையா என தகவல் தெரிகிறது. அங்கும் வழிகாட்ட ஊழியர்கள் இல்லை. ஏழுமலையானே வழிகாட்ட வேண்டும் என்றுதான் பக்தர்கள் திருமலை செல்லும் நிலை உள்ளது.
பக்தர்கள் கூட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆன்லைனில் காண்பிப்பதால், ஒவ்வொருவரும் தங்கள் ஊர்களில் இருந்தபடியே அறிந்துகொள்லாவார்கள். திருப்பதியில் ஆங்காங்கே பெரிய டிஜிட்டல் திரையில், இப்போது கோவிலில் கூட்டம் எவ்வளவு இருக்கிறது என்பதை எண்ணிக்கையுடனோ அல்லது கூகுள் மேப்பில் காட்டுவதை போல கிராப் மாதிரியோ காட்டினால் பக்தர்கள் தங்கள் பயணத் திட்டத்தை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்வார்கள். திருப்பதி தேவஸ்தானமோ அல்லது மாநில அரசோ இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications