திருப்பதி தேவஸ்தானம் தந்த குட் நியூஸ்.. திருமலையில் ரூம் போட்டு தங்குவோருக்கு இனி புதிய ரூல்ஸ்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தங்கும் அறைகள் ஒதுக்குவதில் உள்ள நடைமுறைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.. கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.. இந்த சூழலில் தங்குமிட வசதிகளில் சில நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன..
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தங்கும் அறைகள் ஒதுக்குவதில் உள்ள நடைமுறைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம்
கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.. இந்த சூழலில் தங்குமிட வசதிகளில் சில நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டதாவது..
திருமலையில் உள்ள அறைகள் ஒதுக்கீட்டில் இனி குடும்பத்துடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.. இதன்படி திருமலையில் அறைகள் பெற வரும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களுக்கு அறைகள்
குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் தனியாக வரும் நபர்களுக்கு (Single Persons) அறைகள் வழங்கப்பட மாட்டாது என்பதுதான் இந்த அறிவிப்பின் முக்கிய அம்சம்.. இந்த நடைமுறை ஏற்கனவே சில இடங்களில் அமலில் இருந்தாலும், தற்போது கோடை கூட்ட நெரிசல் காரணமாக இது தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது..
குறிப்பாக திருமலையில் மொத்தம் 7,800 அறைகள் மட்டுமே உள்ளன.. ஆனால் தினமும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம்.. இதனால் அறைகள் ஒதுக்கீட்டைச் சீர்படுத்தவும், அறைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. தனி நபர்களுக்கு அறைகள் வழங்க மறுப்பதன் மூலம், குடும்பமாக வரும் சாமானிய பக்தர்களுக்குத் தங்குமிடம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என நிர்வாகம் கருதுகிறது..!!
தேவஸ்தானம் பக்தர்களுக்கு விதிமுறை
தனி நபர்களுக்கு அறைகள் கிடையாது என்ற செய்தி பரவியுள்ள நிலையில், தங்குமிடம் பெறுவதில் சில மாற்றங்கள் வந்துள்ளன.. அதே சமயம், அறைகள் கிடைக்காத பக்தர்களுக்காக திருமலையில் 5 இடங்களில் இலவச வசதி வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு லாக்கர் வசதி, குளியலறை மற்றும் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.. அறைகள் கிடைக்காத பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தேவஸ்தானம் கேட்டு கொண்டுள்ளது.. இந்த வளாகங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தங்கும் வகையில் வசதிகள் உள்ளன..
ஆன்லைன் பாதிப்பு இருக்காது
திருமலையில் கூட்ட நெரிசலை குறைக்க ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்குமிட வசதியிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்குப் பாதிப்பு இருக்காது என்றாலும், நேரடியாகத் திருமலைக்கு வந்து அறைகள் தேடும் தனி நபர்களுக்கு இனி தங்குமிடம் கிடைப்பது கடினம்.. இதனால் பக்தர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போதே இந்த நடைமுறைகளைக் கவனித்துக் கொள்வது அவசியம்.. முன்னதாகவே ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்வது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்கும்..
பக்தர்களுக்கு தரிசன வரிசை
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் உள்ளது.. இதற்கிடையே தங்குமிட அறைகளுக்கான தட்டுப்பாடும் நிலவுவதால், பக்தர்கள் தர்ம தரிசன வரிசைகளிலேயே அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.
எனவே பக்தர்கள் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தேவஸ்தானம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் திருமலையில் தங்கும் அறைகள் சரியான முறையில் ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது..
திருப்பதி வரும் பக்தர்கள் தங்களின் ஆதார் அடையாள அட்டையைத் தங்குமிடம் மற்றும் தரிசன டிக்கெட் பெறுவதற்குத் தவறாமல் கொண்டு வர வேண்டும் என்பதும் நினைவூட்டப்பட்டுள்ளது.. குறிப்பாக தனி நபராக வரும் பக்தர்கள் திருமலையில் தங்குவதை தவிர்த்து, திருப்பதி அடிவாரத்திலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்வது நல்லது. இப்போதைய கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்..!!!












Click it and Unblock the Notifications