திருப்பதி தேவஸ்தானம் படைத்த புதிய வரலாறு.. "லட்டு" தான் இங்கே ஹீரோ! முறியடிக்கப்பட்ட 10 ஆண்டு சாதனை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025ல் கோடிக்கணக்கான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.. கடந்த 2024ல் திருப்பதி கோயிலில் 12.15 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில் கடந்த 2025ம் ஆண்டு லட்டுகள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது.. இதுகுறித்து தேவஸ்தானம் முக்கிய செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது..
திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒன்றாகும்... இந்த லட்டு வழங்கும் வழக்கமானது, கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைமுறையில் உள்ளது...

ஏழுமலை கோயில்
திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கூடுதலாக வேண்டுமெனில், ஒரு லட்டு ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
லட்டு தயாரிப்பு திருமலையில் உள்ள 'பொட்டு' என்ற பெரிய சமையலறையில் நடைபெறுகிறது. இங்கு சுமார் 700 வைணவ பிராமணர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் 2 ஷிப்ட்களாக வேலை செய்து, 24 மணி நேரமும் புனிதமான முறையில் லட்டுகளை தயாரிக்கின்றனர்.
லட்டு தான் ஹீரோ
சாதாரண நாட்களில் தினமும் சுமார் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் அதிகம் வருவதால், தினமும் 8 லட்சம் முதல் 10 லட்சம் லட்டுகள் வரை கூடுதலாக தயாரித்து இருப்பில் வைக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் லட்டின் ருசி மேலும் சிறந்ததாக இருப்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். இந்த தர மேம்பாடே லட்டு விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தானம் ஹேப்பி
இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2025-ம் ஆண்டு திருப்பதி லட்டு பிரசாதம் விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பாகவும் வெளியிட்டுள்ளது..
அந்த செய்திக்குறிப்பில், "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் 'லட்டு' உலக பிரசித்தி பெற்றதாகும். லட்டு பிரசாத விற்பனையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
10 ஆண்டுகள் சக்சஸ் முறியடிப்பு
கோவிலில் 2024-ம் ஆண்டு 12 கோடியே 15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2025-ம் ஆண்டு 1 கோடியே 37 லட்சம் லட்டுகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த 2024-ம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும்.
2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அன்று கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 5 லட்சத்து 13 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகி புதிய சாதனையை படைத்தது.
புதிய சாதனை லட்டு
கோவிலில் சாதாரண நாட்களில் தினமும் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் தேவைக்காக 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை கூடுதலாக லட்டுகள் தயாரித்து இருப்பு வைக்கப்படுகின்றன. கோவிலில் லட்டுகள் தயாரிக்கும் சமையல் அறையில் 700 வைணவ பிராமணர்கள் 2 ஷிப்டுகளில் 24 மணி நேரமும் விதி நியமங்களுடன் லட்டு பிரசாதத்தை தயாரித்து வருகின்றனர்.
சமீபகாலமாக லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் ருசி அதிகரித்துள்ளதாக, பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2025-ம் ஆண்டு லட்டு பிரசாத விற்பனையில் மறக்க முடியாத சாதனை ஆண்டாக அமைந்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications