திருப்பதி தேவஸ்தானத்தில் குட்நியூஸ்.. 47 ஏக்கர் நிலம்? ரேணிகுண்டா ஏர்போர்ட் பெயர் மாற்றமா? சர்ப்ரைஸ்
திருப்பதி: திருப்பதி ஏர்போர்ட்டின் பெயர் விரைவில் மாற்றப்படுமா? என்ற ஆர்வத்தில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்... இப்படிப்பட்ட சூழலில், தேவஸ்தானம் சில முக்கிய விஷயங்களை கையில் எடுக்க போகிறது.. இது தொடர்பான அறிவிப்புகளையும், திட்டங்களையும் பரிந்துரையையும் கேட்டு, பெருமாள் பக்தர்கள் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்
அதன் ஒரு பகுதியாக, ஏழுமலையானை தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் அன்னதான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கடந்த சில மாதங்களுக்கு மன்பு, லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் இருப்பதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்றது.. பிறகு, சிபிஐ இயக்குனர் தலைமையில் சிறப்பு குழு இதுகுறித்த விசாரணையை நடத்தியது அனைவரும் அறிந்த செய்தியே.
நெய்யில் கலப்படம்
இதையடுத்து, நெய்யில் கலப்படம் கண்டறிய ஜெர்மனி நாட்டில் தயாரான ரூ.70 லட்சம் மதிப்புள்ள தொழில்நுட்ப ஆய்வக இயந்திரங்களை என்டிடிபி (தேசிய பால்வள வாரியம்) திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது.. இந்த இயந்திரங்கள் மூலம் நெய்யில் கலப்படம் இருந்தால் அது முழுமையாக தெரிந்துவிடும்..
லட்டு பிரசாத நெய் மட்டுமின்றி, அந்த ஆய்வகம் மூலம் அன்னபிரசாத தயாரிப்பு பொருட்களான கடலை மாவு, திராட்சை, முந்திரி, மிளகாய், அரிசி உள்ளிட்ட பொருட்களும் சோதனை செய்யப்படும், இதுதவிர தனியாக ஒரு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருவதாகவும், அந்த ஆய்வுக்கூடத்தில் திருமலையில் விற்கப்படும் பாஸ்ட்புட் உள்ளிட்ட உணவு பொருட்களில் கலப்படம் உள்ளதா என சோதனை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் அப்போது கூறியிருந்தனர்.
புதிய அறிவிப்பு வெளியிட்ட தேவஸ்தானம்
இந்நிலையில், ஆய்வகம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் போர்டு தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.. திருமலை அன்னமையா பவனில் நடைபெற்ற TTD அறங்காவலர் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து தேவஸ்தானம் போர்டு தலைவர் பி.ஆர். நாயுடு செய்தியாளர்களிடம் விளக்கினார்..
அவர் சொல்லும்போது, "ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ரேணிகுண்டா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தின் பெயரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச விமான நிலையம் (Sri Venkateswara International Airport) எனப் பெயர் மாற்ற வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் போர்டு இந்திய விமான போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
நில ஒதுக்கீடு
மேலும், கர்நாடக அரசின் நில ஒதுக்கீடு நிலுவையில் உள்ள நிலையில், பெங்களூருவின் முக்கியப் பகுதியில் ஸ்ரீவாரி கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.. கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வேண்டுகோளின் பேரில் 47 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் குமார சுவாமி, திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு 100 மின்சார பேருந்துகள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
நிலம் குத்தகை
திருப்பதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கோவில் பிரசாதங்களுக்கு பயன்படுத்தப்படும் நெய், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய ஆய்வகம் உருவாக்கப்படும்.
CSIR ஆய்வகத்திற்கான நிலத்தை TTD குத்தகைக்கு ஒதுக்கவும், TTD கல்லூரிகளை நவீனமயமாக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. TTDயின் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப APPSCக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.. 200 ஒப்பந்த விரிவுரையாளர்களின் பிரச்சினைகளை ஆலோசித்து தீர்ப்பதற்காகவே 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்மீக அழகை கொண்டு வர பல்வேறு நிகழ்ச்சிகள், யோகா தின நிகழ்ச்சி உள்ளிட்ட பல திட்டங்களும் தேவஸ்தானத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான மன சுவதம், சத்கமயா திட்டங்கள் உள்ளிட்ட பல பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலானது பெருமாள் பக்தர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications