திருப்பதி தேவஸ்தானத்தில் சூப்பர் அறிவிப்பு.. திருமலை பக்தர்களுக்கு லட்டு நியூஸ்! AI பாதுகாப்பு வசதி
திருப்பதி: உலகின் பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் நிலையில், அதன் பாதுகாப்பில் தொடர்ந்து முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.. குறிப்பாக, கோவிலின் புனித சூழலுக்கு இடையூறாக உள்ள விஷயங்களை நீக்கவும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது புதிய முடிவு ஒன்றினை தேவஸ்தானம் எடுத்துள்ளது, பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
திருப்பதி தேவஸ்தானத்தின் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.. புதிய விதிகளையும், வசதிகளையும் அதிகரித்தபடியே வருகிறது...
சமீபத்தில்கூட திருமலையில் விஐபிக்களுக்கு தங்குமிட வசதிகளை ஒதுக்குவதற்கான புதிய விதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.. இனிமேல், திருப்பதி தரிசனத்துக்கு தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே விஐபிக்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும்.

விஐபி அறைகள்
VIP அறைகளை முன்பதிவு செய்ய பத்மாவதி விசாரணை மையம், MBC மற்றும் TB கவுண்டர்கள் உள்ளிட்ட நியமிக்கப்பட்ட கவுண்டர்களில் தங்கள் ஆதார் அட்டை மற்றும் தரிசன டிக்கெட் இரண்டையும் காண்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத வழிகளில் அறைகள் ஒதுக்கீடு நடைபெறுவதைத் தடுக்கவே இவ்வாறான அதிரடியை தேவஸ்தானம் எடுத்திருக்கிறது.
அதேபோல, சேவைகள் குறித்து பக்தர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில், திருப்பதியில் பல்வேறு இடங்களில் கியூஆர் கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து பக்தர்கள் டெக்ஸ்டாகவோ, வீடியோவாகவோ தங்களுடைய கருத்தை தெரிவிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பம்
அந்தவகையில், தற்போது டிரோன் தடுப்பு மற்றும் AI உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
வழக்கமாக இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள் என்பதால், எப்போதுமே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். எனினும், அடிக்கடி தடையை மீறி டிரோன்களை பறக்கவிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு ஹரியானாவை சேர்ந்த ஒரு தம்பதி, திருமலை சாலையில் டிரோனை பறக்கவிட்டு, மாநிலத்தையே பெரும் பரபரப்பாக்கிவிட்டது..
டிரோன் பயன்பாடுகள்
அதேபோல டிரோனை பயன்படுத்தி கோவிலையும் அதன் சுற்றுப்பகுதியையும் படம்பிடித்ததாகக் கூறி, ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் கைதாகியிருந்தார். இதுபோல கோவிலுக்கு மேலுள்ள வான்பகுதியில் இடம்பெறும் நடவடிக்கைகள், அதன் புனித சூழலுக்கு இடையூறாக இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் கருதுகிறது.. எனவேதான், அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பாதுகாப்பை பலப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது..
இது குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமலா ராவ் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "கோவிலில் பக்தர்களின் தரிசன வசதியை எளிமையாக்குதல், ஆள்மாறாட்டம், மோசடி வேலைகளை தடுப்பது, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுலபமாக்க, AI உள்பட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதிநவீன தொழில்நுட்பங்கள்அதுமட்டுமில்லாமல், தடையை மீறி பறக்கவிடப்படும் டிரோன்களை கண்டறிந்து தாக்கி அழிக்கும் UAV சாதனங்களையும் கோவில் வளாகத்தை சுற்றி பறக்கவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது... இதுபோன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், தடையை மீறி போட்டோக்களை எடுப்பது போன்ற விதிமீறல்கள் தடுக்கமுடியும்..
அதுமட்டுமல்ல, கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடையாளத்தையும் சரிபார்க்க முக அங்கீகாரம் (facial recognition) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், பக்தர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications