திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க.. பக்தர்களுக்கு ஆன்லைன் டிக்கெட் இன்று காலை ரிலீஸ்!
திருப்பதி: திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று காலை வெளியிடப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் ரூ. 300 டிக்கெட் தரிசனம், இலவச தரிசனம் என பல்வேறு சேவைகள் மூலம் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள்.

தற்போது திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் நீண்ட நேரம் தரிசனத்திற்காக காத்திருக்காமல் இருக்க தரிசன டிக்கெட் ஆன்லைனில விற்பனை செய்யப்படுகிறது. இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் வசதிக்காக பேருந்து நிலையம், ரயில் நிலையம், அலிபிரி, கோவிந்தராஜ சாமி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தினமும் 25 ஆயிரம் நேர ஒதுக்கிட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று (செப்டம்பர் 25) வெளியிடப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 1ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணிக்கு பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications