திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இன்று முதல் திவ்ய தரிசன டோக்கன் விநியோகம்!
திருப்பதி: திருப்பதி இலவச தரிசன டோக்கன் கவுண்டர் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் திவ்ய தரிசன டோக்கன் விநியோகம் செய்யப்படும்.
திருப்பதி ஏழுமலையானை அலிபிரி அல்லது ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக மலையேறி செல்லும் பக்தர்களுக்கு பாதி வழியில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. மேலும் ஒரு லட்டு பிரசாதமும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. . ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு தினமும் 5 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.

இதனை முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் ரத்து செய்தனர். ஒருசில ஆட்டோ மற்றும் வாடகை கார், டிரைவர்கள் இலவச தரிசன டோக்கன் வாங்கி தருவதாக பக்தர்களிடம் பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த டிக்கெட் விநியோகம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திர முதல்வர் ஆனதும், திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, இன்று ஜூன் 6 ஆம் தேதி மாலை 5 மணி முதல் அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் திவ்ய தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக 10 விநியோக கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 திவ்ய தரிசன டோக்கன்களுக்காகவும், மீதமுள்ள 4 கவுன்டர்கள் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் மையங்கள் எனவும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை 5 மணி முதல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை பக்தர்கள் அலிபிரியில் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு நாளை சனிக்கிழமை தரிசனம் செய்யலாம். தினமும் மாலையில் கவுன்டர்கள் திறக்கப்பட்டு 3,000 டிக்கெட் வழங்கப்படும். கவுண்டரில் வழங்கப்படும் தரிசன டிக்கெட்டுகளை ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் உள்ள 1200-வது படியில் கட்டாயம் ஸ்கேன் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் வரும் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அபிஷேகத்திற்கு பின்னர் தங்க கவசத்தை களைந்து முதல்நாள் வைர கவசமும், 2 ஆம் நாள் முத்து கவசமும், 3-ம் நாள் மீண்டும் தங்க கவசமும் மலையப்பர் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications