திருப்பதி கூட்ட நெரிசலில் சேலம் பெண் பக்தர் உள்பட 6 பேர் பலி.. அடுத்தடுத்து மூச்சுத்திணறி இறந்தனர்
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேி வரை திருப்பதி ஏழுமையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதற்காக இலவச தரிசனத்துக்கான டோக்கனை பெற பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சேலத்தை சேர்ந்த பெண் பக்தர் உள்பட 6 பேர் அடுத்தடுத்து மூச்சுத்திணறி பலியாகி உள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியாகும். வைகுண்ட ஏகாதசி திருப்பதி கோவிலில் மிகவும் சிறப்பாக நடக்கும். ஏராளமான பக்தர்கள் வைகுண்ட ஏகாதசியையொட்டி சாமி தரிசனம் செய்வார்கள். சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி 2025ம் ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10ல் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் ஜனவரி 10 முதல் ஜனவரி 19ம் தேதி வரை சொர்க்கவாசல் என்பது திறந்து இருக்கும்.
இந்த நாட்களில் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் வைத்திருப்போர் மட்டும் திருப்பதிக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான் அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார். இந்த தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன் இன்றி கோவிலுக்கு வருவோருக்கு ஜனவரி 10 முதல் ஜனவரி 19 வரை அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலவச தரிசன டோக்கன் என்பது நாளை (ஜனவரி 9) வழங்கப்பட உள்ளது. இதற்காக திருப்பதியில் 8 கவுண்ட்டர்கள், திருமலையில் ஒரு கவுண்ட்டர் என்றறு மொத்தம் 9 கவுண்ட்டர்கள் திறக்கப்பட உள்ளன. இந்த கவுண்ட்டர்களில் நாளை அதிகாலை 5 மணி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் இலவச தரிசன டோக்கனை பெற இன்று இரவே பக்தர்கள் ஏராளமானவர்கள் திருப்பதியில் கூடியுள்ளனர். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பக்தர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போலீசை மீறியும் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் பலியாகி உள்ளார். கூட்ட நெரிசலில் அவர் மூச்சுத்திணறி பலியாகி உள்ளார். இறந்த மல்லிகாவின் உடல் திருப்பதி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மேலும் பல பக்தர்கள் மூச்சுத்திணறி கீழே விழுந்தன. இவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை உயர தொடங்கி உள்ளது. அதன்படி இரவு 10 மணி நிலவரப்படி பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications