திருப்பதிக்கு போறீங்களா? தரிசன நேரத்தில் மிக முக்கிய மாற்றம்.. இது தெரியாம கிளம்ப வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் இப்போது ஆப்லைன் முறையில் தரிசன டிக்கெட் பெறும் பக்தர்கள் 3 நாட்கள் வரை காத்திருந்து தரிசிக்க வேண்டி இருக்கிறது. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இதற்கிடையே சாமி தரிசனம் தொடர்பாக நேரத்தை மாற்றி மிக முக்கியமான ஒரு அறிவிப்பைத் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையானுக்கு உலகெங்கும் பக்தர்கள் உள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானைத் தரிசிக்க வருவார்கள். இதனால் பெரும்பாலான நேரம் அங்குக் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ஆன்லைனில் புக் செய்து வருவோருக்கு அங்குப் பெரிய சிக்கல் இருக்காது. ஆனால், நேரடியாகத் தரிசனம் செய்ய வருவோருக்குச் சிக்கல் இருக்கும்.

Tirupati temple

மாற்றம்

இதற்கிடையே திருப்பதி ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 1 முதல் 15 வரை, ஸ்ரீவாணி (SRIVANI) ஆஃப்லைன் தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கான புதிய தரிசன நேரம் அறிமுகப்படுத்துவதாகத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் தற்காலிகமாக இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்போது திருப்பதி வெங்கடேஸ்வரா ஸ்வாமியை தரிசிக்க 3 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த புதிய நடைமுறை காத்திருப்பு நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நடைமுறையின்படி ஸ்ரீவாணி ஆஃப்லைன் டிக்கெட்டுகளைப் பெறும் பக்தர்கள், அன்றைய தினமே கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மாற்றம் என்ன!

திருப்பதியில் வழங்கப்படும் இந்த டிக்கெட்களை கொண்டு இப்போது காலை 10 மணி முதல் தரிசனம் செய்யலாம். முதலில் வருவோருக்கு முதலில் என்ற அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்போது புதிய அறிவிப்பின்படி திருப்பதியில் டிக்கெட்டுகளைப் பெறும் பக்தர்கள், அன்றைய தினமே மாலை 4.30 மணிக்குள் வைகுண்டம் காப்பாளர் வளாகம்-1இல் தரிசனத்திற்காக வந்து சேர வேண்டும்.

திருப்பதி மட்டுமின்றி ரேணிகுண்டா விமான நிலையத்தில் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. அந்த டிக்கெட்களை காலை 7 மணி முதல் தரிசன டிக்கெட்டுகளை வழங்கப்படும் நிலையில், அது தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் 800 ஆஃப்லைன் டிக்கெட்டுகள் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் 200 டிக்கெட்டுகள் வழங்கப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது முதல்

சோதனை முறை முடிந்த பிறகு மீண்டும் அக்டோபர் 31 வரை SRIVANI ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ள பக்தர்கள், அவர்களின் வழக்கமான காலை 10 மணி முதல் தரிசனம் செய்யலாம். அதேநேரம் நவம்பர் 1 முதல் SRIVANI டிக்கெட்டுகளை (ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன்) முன்பதிவு செய்பவர்கள் காலை 10 மணிக்கு பதிலாக மாலை 4.30 மணிக்கு தரிசனத்திற்காக வைகுண்டம் காப்பாளர் வளாகம்-1இல் வந்து சேர வேண்டும்.

பக்தர்களுக்குத் தேவையற்ற சிரமங்களைத் தவிர்ப்பதற்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலை 10 மணிக்குத் தரிசன டிக்கெட்களை பெற்றுக்கொண்டு மாலை 4.30 மணிக்கு வைகுண்டம் காப்பாளர் வளாகம் செல்ல வேண்டும். திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+