Tirupati: இன்று சந்திரகிரகணம்! திருப்பதி ஏழுமலையான் கோயில் 10 மணி நேரம் மூடல்!
திருப்பதி: மார்ச் 3 ஆம் தேதியான இன்று சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டுள்ளது. சுமார் 10 மணி நேரத்திற்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாது.
சந்திர கிரகணம் காரணமாக மார்ச் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை ஸ்ரீவாரி கோவில் நடை சாத்தப்படும். (சந்திர கிரகணத்தின் உண்மையான நேரம் மதியம் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை). வைகுண்டம் க்யூ காம்ப்ளெக்ஸ், ராம் பாகிச்சா மற்றும் சி.ஆர்.ஓ மையங்களில் பக்தர்களுக்கு சுமார் 40,000 புளியோதரை பொட்டலங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சந்திர கிரகணம் காரணமாக மார்ச் 3ஆம் தேதி இன்று அஷ்டதள பாத பத்மராதனா சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதிபாலங்கார சேவை, ஆர்ஜித சேவைகள் மற்றும் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அன்று ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், நன்கொடையாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோயில் நடை இரவு 7.30 மணி வரை அடைக்கப்பட்டு இருக்கும். இரவு 8.30 மணிக்கு மேல் கோயில் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு, பக்தர்கள் வழக்கம் போல் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். திருமலையில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படாது என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications