திருப்பதியில் காரில் ஏசி போட்டு தூங்கிய அண்ணன் தம்பிகள்.. செய்த சிறு தவறு.. எமனாகிய காற்று
திருப்பதி: காரில் ஏசி போட்டு தூங்குவதை பலர் வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் காரை ஸ்டார்ட் செய்து பயணிக்கும் போது ஏசி போட்டு தூங்கியபடி சென்றாலும், டிரைவர் முழித்துக் கொண்டு வருவார். காரில் அப்போது எந்த பிரச்சனையும் தெரியாது.மாறாக காரில் என்ஜின் வெறும் ஏசியை மட்டும் போட்டும் தூங்கினால் சிக்கல் ஏற்படும்.. திருப்பதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்.
இன்றைக்கு கார் ஓட்டும் பலர், சாலைகளில் ஆங்காங்கே கார்களை நிறுத்தி இரவில் ஓய்வெடுக்கிறார்கள். சவாரி இல்லாத நேரங்களில் ஓய்வெடுக்கிறார்கள். அப்படி ஓய்வெடுக்கும் போது, நிறுத்தப்பட்ட பின்னர் காரில் ஏசியை போட்டுவிட்டு தூங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

கார்பன் மோனாக்சைடு
ஆனால் எப்போதுமே காரில் ஏசி போட்டு தூங்குவது ஆபத்தானது என்கிறார்கள் அனுபவம் உள்ள வாகன ஓட்டிகள். ஏனெனில் காரை நிறுத்திவிட்டு ஏசி இயக்கிக்கொண்டு தூங்கினால், அந்த ஏசியில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு விஷம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் காரில் உள்ள ஏசி பழையதாகவோ அல்லது சேதமடைந்திருந்தாலோ, உள்ளே உள்ள காற்று போதுமான அளவு நிரப்பப்படாமல் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் அதிகரிக்க அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.
என்ன நடக்கும்
எனவே நிறுத்தப்பட்ட காரில் வெறும் இன்ஜின் மட்டும் இயங்கும் போது, அதில் வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, காரின் ஃபயர் வால் வழியாக உள்ளே நுழைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த விஷவாயு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்று கார் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கண்ணாடியை இறக்க வேண்டும்
இது போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, காரினுள் ஏ.சி.யை போட்டு தூங்க நேர்ந்தால் காரின் கண்ணாடியை சற்று கீழே இறக்கிய நிலையில் வைத்து உறங்குகிறார்கள் சிலர். இப்படி கண்ணாடியை இறக்கி வைப்பதன் மூலம், வெளிக்காற்று உள்ளே வந்து செல்லும் வகையில் இருந்தால் நச்சு பாதிப்பு குறையும் என்கிறார்கள். மேலும் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏ.சி. பயன்படுத்தும் போது, ரீசர்க்குலேஷன் மோடில் வைப்பதை தவிர்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். திருப்பதியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருப்பதி கார்
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப் (வயது 25), வினய் (20). இருவரும் அண்ணன், தம்பிகள் ஆவார்கள். இதில் திலீப் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். வினய் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
மதுபோதையில் தவறு
இருவரும் திருச்சானூர் அருகே உள்ள காலவகட்டா அருகே உள்ள பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். அங்கு காரில் ஏ.சி. போட்டபடி மது அருந்தினர். பின்னர் அவர்கள் காரிலேயே மதுபோதையில் தூங்கி விட்டார்கள். அதேநேரம் மது அருந்துவது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக காரை துணியை வைத்து போர்த்தி மறைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஏ.சி. வேலை செய்யாததால் இருவரும் மூச்சுத்திணறி காரிலேயே இறந்து விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications