Tiruppur: "ஓடாதடா.. முத்தம் தார்றேன்டா" திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் நள்ளிரவில் இளைஞர்களை விரட்டிய இளம்பெண்கள்
திருப்பூர்: திருப்பூர் பஸ் நிலையத்தில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவரை கட்டி அணைத்து முத்தமழை பொழிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதுவும் அந்த வாலிபர் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், "ஏய்.. ஓடாதடா.. முத்தம் தாரேன்டா, வாங்கிக்கோ.." என்று சொல்லியபடி விரட்டி சென்று முத்தம் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் திருப்பூர் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் சக பயணிகளை முகம் சுளிக்க வைத்தது.
பொது இடங்களில் காதல் என்ற பெயரில் இளம் ஜோடிகள் செய்யும் சம்பவங்கள் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக அமைந்துவிடுகின்றன. ஒட்டுமொத்தமாக எல்லாரும் இப்படித்தான் என்று இல்லை என்றாலும் ஒருசிலர் செய்யும் அநாகரிக செயல்களால் மற்றவர்களை கடும் சங்கடத்தில் ஆழ்த்துகிறது.

ஓடாதடா.. முத்தம் தார்றேன்டா
பார்க், சுற்றுலா தலங்கள், சாலைகள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், பஸ்களில் செல்லும் போது சில இளம் ஜோடிகள் காதல் ஆசையில் எல்லை மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
திருப்பூர் பஸ் நிலையம் அருகே நள்ளிரவில் இரண்டு வாலிபர்கள் மற்றும் இரண்டு இளம்பெண்கள் நின்று கொண்டிருந்தனர். திடீரென ஒரு இளம்பெண் ஒரு வாலிபரை கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தார். இதையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணின் பிடியில் இருந்து தப்பித்து ஓடுகிறார். அப்போதும் அந்த இளம்பெண் விடாமல் துரத்தி செல்கிறார். "ஏய்.. ஓடாதடா.. உனக்கு முத்தம் தார்றேன்டா.. வாங்கிக்கோ.." "நில்லுடா" என விரட்டி சென்று மீண்டும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ
இதேபோல் மற்றொரு இளம்பெண்ணும் அந்த வாலிபருடன் நெருக்கமாக நின்று பேசிக்கொண்டிருப்பது போல் இந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகியிருந்த அந்த வீடியோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. வாலிபரை கட்டிப்பிடித்து முத்தமிடுவது அழகிகள் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். அவர்கள் காதல் ஜோடியா? இல்லை அழகிகளா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது பற்றி நெட்டிசன்கள் தெரிவிக்கையில், "வேலை விஷயமாக திருப்பூர் வரும் வாலிபர்களை குறிவைத்து இளம்பெண்கள் கூட்டம் ஒன்று பணம் பறிக்கும் நோக்கத்தில் இப்படி நள்ளிரவு நேரங்களில் சுற்றி வருவதாகவும், டிப்டாப் உடை, மேக்கப்-புடன் வலம் வந்து வாலிபர்களை முத்தம் கொடுத்து மயக்கி விடுகின்றனர், பின்னர் விடுதி அறைகளுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவிக்க செய்துவிட்டு அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பறித்துவிட்டு அனுப்பிவிடுகின்றனர்" என்று கூறினர்.
பொதுமக்கள் கோரிக்கை
ஜீன்ஸ் பேன்ட், டீ-சர்ட், சுடிதார் என பலவித ஆடைகளுடன் நள்ளிரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் சுற்றி வருவதாகவும், புதிதாக வேலை தேடி வரும் வாலிபர்களிடம் நைஸாக பேச்சு கொடுத்து விடுதிகளுக்கு அழைத்து செல்வதாகவும், இதில் மயங்காதவர்களை முத்தம் கொடுத்து, கட்டி அணைத்து மயக்கி விடுதிக்கு அழைத்து செல்வதையும் குறிக்கோளாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications