உடுமலைப்பேட்டை தொகுதி.. திமுக இளைஞரணி நிர்வாகிக்கு சீட்? சிக்னல் காட்டிய உதயநிதி ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: 25 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை தொகுதியை கைப்பற்ற முடியாமல் திமுக தடுமாறி வரும் நிலையில், இம்முறை அந்த தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. உட்கட்சிப் பூசல் உள்ளிட்டவற்றை களைந்து, பொதுவான வேட்பாளரை நிறுத்தவும் திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.

2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை வீழ்த்த வேண்டும் என்பதில் திமுக தலைமை குறியாக உள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகவின் முக்கிய தலைவர்களை வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 3 தொகுதிகள் மட்டுமே திமுக வசம் இருக்கிறது.

TN Election Exclusive

மீதமுள்ள 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வசம் இருக்கிறது. குறிப்பாக உடுமலைப்பேட்டை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பெற்று வருகிறார். இந்த தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்று 25 ஆண்டுகளாக திமுக போராடி வருகிறது. கடைசியாக 1996 சட்டசபைத் தேர்தலில் இந்த தொகுதியில் திமுக வென்றது.

அதன்பின் நடந்த எந்த தேர்தலிலும் திமுக வெற்றிபெறவில்லை. இம்முறை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 6ல் வெல்ல வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அதற்கேற்ப பொறுப்பு அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் நிர்வாகிகளை வேகப்படுத்தி இருக்கிறார். இதனிடையே உளவுத்துறை மற்றும் பென் நிறுவனம் மூலமாகவும் பிரத்யேக ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? திமுகவின் உட்கட்சி பிரச்சனை, தொகுதிக்குள் இருக்கும் செல்வாக்கு உள்ளிட்டவை தொடர்பாக தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதனிடையே உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட நகரச் செயலாளர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷ்யாம் சுந்தர், இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் முரளி உள்ளிட்டோர் தீவிரம் காட்டுகின்றனர்.

இதில் அண்மையில் உடுமலைப்பேட்டை தொகுதிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதிலும் தன்னுடைய ஆதரவாளர் என்று ஜெயக்குமாரை அனைவருக்கும் புரியும் வகையில் நெருக்கம் காட்டி இருந்தார். ஏற்கனவே உட்கட்சி பிரச்சனையால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ஜெயக்குமார் தோற்கடிக்கப்பட்டார்.

இதனால் ஜெயக்குமாருக்கு உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. இருப்பினும் மற்றவர்கள் திமுக சீனியர்கள் மூலமாக திமுக தலைமையிடம் சீட் பெற முயற்சித்து வருகின்றனர். இருந்தாலும் உட்கட்சி பிரச்சனையால் தொகுதியை இழக்க கூடாது என்பதே ஸ்டாலினின் முடிவாக இருப்பதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+