திருப்பதியில் நீண்ட நேரம் கியூவில் காத்திருக்கிறீர்களா? தேவஸ்தானத்தின் புதிய ப்ராஜக்ட் தயார்!
திருப்பதி: திருப்பதியில் பக்தர்களின் சிரமங்களை போக்க தேவஸ்தானம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். புரட்டாசி மாதம், பிரம்மோற்சவம், தொடர் விடுமுறை நாட்கள், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்கள், ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் லட்சக்கணக்கில் அலைமோதும்.

இதனால் தர்ம தரிசனத்திற்கு 24 மணி நேரத்தை தாண்டி பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் எழுகிறது. இது பக்தர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலை கொடுக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி அசம்பாவிதம் ஏற்படும் நிலையும் இருக்கிறது. இதனால் பக்தர்களின் பிரச்சினைகளை போக்க என்ன செய்யலாம் என தேவஸ்தானம் ஆலோசனை செய்தது.
அந்த வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதியில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாக அதிகாரி அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தானத்தின் சென்னை, புதுவை மண்டல ஆலோசனை குழுத் தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுடன் கருணாகர ரெட்டி பேசுகையில் திருப்பதி மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள கோ மந்திரம், கோ பூஜை நிலையம் அருகே ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரஹ ஹோமம் என்ற பெயரில் இடைவிடாது ஹோமம் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகில் வசிக்கும் 140 கோடி இந்துக்களும் தங்களுடைய விசேஷ நாட்களில் அங்கு வந்து சங்கல்பம் செய்து ஹோமத்தில் கலந்து கொள்ளலாம். இதற்குரிய கட்டணம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றார். விசேஷ மற்றும் விடுமுறை நாட்கள் திருப்பதி மலைக்கு அதிக பக்தர்கள் வரும் நிலையில் இலவச தரிசனத்திற்காக அவர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

பக்தர்கள் காத்திருக்கும் வரிசைகளில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்பதை நேரில் ஆய்வு செய்து தெரிந்து கொண்டோம். எனவே 18 கோடி ரூபாய் செலவில் 7 கி.மீ. தூரத்திற்கு புட்கோர்ட், கழிவறை உள்ளிட்ட வசதிகளை கொண்ட நிரந்தர வரிசையை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் தேவஸ்தானத்தின் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமும் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும் திருப்பதி மலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க பல்வேறு சாலைகளை மேம்படுத்தவும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தூய்மை பணிகளை தேவஸ்தானமே மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேவஸ்தானத்தின் வருமானத்தில் ஒரு சதவீதத்தை திருப்பதி வளர்ச்சிக்கு பயன்படுத்தவும் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக உள்ள கோயில்களில் மிக பழமையானதாக இருக்கும் கோபுரங்களை ஆய்வு செய்து அவற்றை புனர் நிர்மாணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications