திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வைகுண்ட ஏகாதசிக்கு போறீங்களா.. திருமலை தேவஸ்தானம் குட்நியூஸ்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 10-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் வழப்பட உள்ள நிலையில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அந்த வகையில் வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி செல்வோருக்கு வசதியாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் 9 மையங்களில் நேரடியாக வினியோகம் செய்யப்படும், என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் வைகுண்ட துவார தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை டிசம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 10-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் மற்றும் கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் திருமலையில் உள்ள அன்னமயா பவனில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

அந்த கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முடிவுகளை தேவஸ்தான் வெளியிட்டுள்ளளது. இதன்படி வருகிற டிசம்பர் 23-ந்தேதி காலை 11 மணிக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்காக 10 நாள் ஸ்ரீவாணி டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. வைகுண்ட தரிசனத்துக்காக 10 நாட்கள் எஸ்.இ.டி. டிக்கெட்டுகள் (ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள்) ஆன்லைனில் 24-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்கு திருப்பதியில் 8 மையங்களிலும் டோக்கன் வழங்கப்படும். இதேபோல், திருமலையில் ஒரு மையத்திலும் எஸ்.எஸ்.டி. (தேதி நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசனம்) டோக்கன்கள் நேரடியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதேபோல் திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக, திருப்பதி மாநகரில் உள்ள எம்.ஆர்.பள்ளி, ஜீவகோணா ராமா நாயுடு பள்ளி, ராமச்சந்திரா புஷ்கரணி, இந்திரா மைதானம், சீனிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி வளாகம், கவுஸ்தூபம் ஓய்வு இல்லம் ஆகிய 8 இடங்களில் திருமலை தரிசனத்திற்கான டோக்கன்கள் நேரடியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேவஸ்தான் அறிவித்துள்ளது. அதேநேரம் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு டோக்கன்கள் வழங்கும் மையங்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன், டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ள தேவஸ்தானம் டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வரலாம். ஆனால், வரிசைகளில் சாமி தரிசனக்காக செல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேவஸ்தானம் அறிவிப்பில் கூறியுள்ளது.
வைகுண்ட ஏகாதசி நாளில் சாமி தரிசனம் அதிகாலை 4.45 மணிக்கு தொடங்கும் என்றும் வைகுண்ட ஏகாதசி அன்று கடும் நெரிசல் காரணமாக கோவிலில் வேத ஆசிர்வாதம் செய்வது ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்றும் வைகுண்ட ஏகாதசி நாளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்கத்தேர் வலம் வருகிறது என்றும் திருப்பதி தேவஸ்தான்ம் அறிவிப்பில் கூறியுள்ளது. மேலும் வைகுண்ட துவாதசி நாளில் அதிகாலை 5.30 முதல் 6.30 மணிவரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடக்கும் என்றும் கோவிந்த மாலை பக்தர்களுக்கு சிறப்பு தரிசன வசதி இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதி தேவஸ்தான பாதுகாப்புப் பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து திருமலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தேவஸ்தானம் அறிவிப்பில் கூறியுள்ளது.
ஜனவரி மாதம் 10-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் வழப்பட உள்ள 10 நாட்களுக்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தொடர்ந்து அன்னப்பிரசாதம் வினியோகம் செய்ய கேட்டரிங் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்றும், டீ, காபி, பால், உப்மா, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் வினியோகம் செய்யப்படும் என்றும், பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் லட்டு பிரசாதத்துக்கு தினமும் 3.50 லட்சம் லட்டுகள் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் 3.50 லட்சம் லட்டுகளை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதும் தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications