வயிறு வலி.. ஆஸ்பத்திரிக்கு போன சிறுமிக்கு பிரசவம்.. கர்ப்பத்திற்கு காரணம் 17 வயது சிறுவன்!
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்
திருப்பூர்: வயிறு வலிக்காக ஆஸ்பத்திரிக்கு போன 17 வயது மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த கர்ப்பத்திற்கு காரணம் 17 வயது சிறுவன் என்பது இன்னொரு அதிர்ச்சி!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி ஒருத்தி வயிற்று வலி சிகிச்சைக்காக வந்திருந்தாள். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தபோது, அது வயிறு வலி இல்லை, பிரசவ வலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து நடந்த சிகிச்சையை அடுத்து, சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் விஷயம் வெளிப்பட்டது.
சிறுமி 11ம் வகுப்பு படிக்கும் போது, கூட படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் காதலித்து உள்ளனர். ஆனால் அந்த மாணவன், 12-ம் வகுப்பு படிக்கும்போதே பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, பிரைவேட் காட்டன் மில்லுக்கு வேலைக்கு போய்விட்டான். இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தில் கர்ப்பம் அடைந்து இருக்கிறாள் மாணவி. ஆனால் இதை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.
வழக்கம்போல் ஸ்கூலுக்கும் போய் வந்திருக்கிறாள். திடீரென வயிற்று வலி ஏற்படவும்தான் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இந்த விவரங்களை உறுதி செய்த போலீசார், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 17 வயது சிறுவனை கைது செய்து பல்லடம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிறுமியால், குழந்தையை பாதுகாக்க முடியாது என்ற காரணத்தினால், பெண் குழந்தையை காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிறுமிக்கு உரிய வயது வந்த பின்னர் இந்த குழந்தை அவளிடமே ஒப்படைக்கப்படும். 17 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications