திருப்பூரில் போலி ஆதார் அட்டையுடன் 3 வங்கதேச இளைஞர்கள் கைது.. சட்டவிரோதமாக தங்கி இருந்தது ஏன்?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் போலி ஆதார் கார்டு பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. திருப்பூரில் இருந்து உலகம் முழுவதும் பின்னலாடைகள் ஏற்றுமதி ஆகின்றன. வங்கதேசத்திலும் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன.

3 Bangladesh nationals arrested in Tirupur with fake Aadhaar cards

பின்னலாடை ஏற்றுமதியை பொறுத்தவரை நமது திருப்பூருக்கும் வங்கதேசத்திற்கும் இடையே பெரும் போட்டியே நிலவுகிறது. இந்நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் போலி ஆதாருடன் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் நல்லூர் பகுதியில் வங்கதேச இளைஞர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தினர். போலீசாரின் சோதனையில் வங்கதேச இளைஞர்கள் ரூபேஷ், நஸ்ரூல், இஸ்லாம் ஆகியோர் பிடிபட்டனர்.

அவர்கள் போலி ஆதார் அட்டை வைத்திருந்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூருக்கு அவர்கள் எதற்காக வந்தார்கள், போலி ஆதார் அட்டையை பெற்றது எப்படி என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+