Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தை உலுக்கிய பல்லடம் படுகொலை.. உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்..போலீசார் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை பலியானவர்களின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை முன்பாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 members of the same family hacked to death Relatives blocks road demand arrest the culprits

கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த மோகன் ராஜ், பாஜக நிர்வாகி என்றும், அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் அருகில் மது அருந்தியவரை தட்டிக் கேட்டதால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை நடந்த இடத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் படுகொலை வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கொலையாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பலியானவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள், ஊர்மக்கள், மற்றும் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

4 members of the same family hacked to death Relatives blocks road demand arrest the culprits

திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 500 க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போலீசார் பாதுகாப்பு அணியில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உறவினர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம். உறவினர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+