அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்- லாரி பயங்கர மோதல்.. 5 மாணவர்கள் உள்பட 6 பேர் பலி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பழங்கரை தேசிய நெடுஞ்சாலையில் கார்- லாரி பயங்கரமாக மோதிய விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை சேலத்திலிருந்து அவினாசிக்கு சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அப்போது அவிநாசி அருகே பழங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்ற சேலம் விநாயகா பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்களின் டவேரா கார் லாரியின் பின்னால் வேகமாக வந்து திடீரென பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இதில் காரில் பயணம் செய்த 5 மாணவர்கள் மற்றும் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதேபோல் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications