இந்த ஜூலிக்கு ஐந்து வயதுதாங்க. சித்ரா வண்டியை ஸ்டார்ட் செய்தால் போதும்.. தாவி வந்து உட்காருது! செம!
திருப்பூர்: திருப்பூரில் பெண் ஒருவர் ஓட்டும் இருசக்கர வாகனத்தின் பின் சீட்டில் தானாக தாவி உட்காரும் நாய் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதிலும் ஆடாமல் அசையாமல் தூங்காமல் வேடிக்கை பார்த்து வருகிறதாம் ஜூலி!
Recommended Video
திருப்பூர் மாவட்டம் அனுபர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் ஜூலி என்ற நாயை கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.
கடை நடத்தி வரும் சித்ரா தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்க அடிக்கடி மார்க்கெட்டுக்கு செல்லும் பழக்கமுடையவர். இதற்காக அவர் இரு சக்கர வாகனத்தை வைத்துள்ளார்.

பிரியாத ஜூலி
சித்ராவை விட்டு இந்த நாய் பிரியாதாம். இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தால் போதும் இந்த ஜூலி ஓடி வந்து தானாக ஏறி பின் சீட்டில் அமர்ந்துவிடும். பின்னர் ஆடாமல் அசையாமல் முக்கியமாக தூங்காமல் இந்த ஜூலி சமர்த்தாக பயணிக்கிறது.

வாகன என்ஜின்
இதை பார்க்கும் மற்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்து கொண்டே ரசித்து செல்கிறார்கள். சிக்னல்களில் வண்டி நின்றாலும் எந்த ஒரு சேட்டையும் செய்யாமல் உட்கார்ந்த இடத்தில் அமர்ந்திருக்கும். வாகன என்ஜினை ஆஃப் செய்தால் மட்டுமே ஜூலி கீழே இறங்குகிறது.

பாதிப்பில்லை
சிறு வயதிலிருந்து வளர்த்து வருவதால் தன்னை விட்டு பிரியாத ஜூலியை பைக்கில் உட்கார வைத்து திருப்பூரிலிருந்து கோவை, பொள்ளாச்சி ஆகிய ஊர்களுக்கு அழைத்து செல்கிறார் சித்ரா. ஆனால் எவ்வளவு தூரம் சென்றாலும் சித்ராவுக்கோ மற்றவர்களுக்கோ எந்தவித இன்னல்களையும் தருவதில்லையாம் இந்த ஜூலி!

வீடியோ
இந்த ஜூலி தனக்கு பாதுகாப்பாக இருப்பதாக சித்ரா தெரிவிக்கிறார். மிகவும் புத்திசாலியான இந்த ஜூலி, சித்ராவின் வியாபாரத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது. சித்ராவின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு ஜூலி பயணிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications