திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகனா நினைக்கிறேன்.. காப்பாற்றுங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சுப்பாத்தாளின் கண்ணீர் கோரிக்கை!

Google Oneindia Tamil News

திருப்பூர்: கொரோனோ நோய் தொற்று பாதித்த தன்னை ஒருவருவரும் கண்டுகொள்ளவில்லை என உருக்காக 75 வயது மூதாட்டி ஒருவர் முதல்வர் ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    மகனா நினைக்கிறேன்.. காப்பாற்றுங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சுப்பாத்தாளின் கண்ணீர் கோரிக்கை!

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சடையகவுண்டனூர் கிராமத்தை சார்ந்தவர் சுப்பாத்தாள்

    28-ம் தேதி காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கம்.. விரைவு பஸ்கள் இயக்கப்படுமா?.. அரசின் முக்கிய அறிவிப்பு 28-ம் தேதி காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கம்.. விரைவு பஸ்கள் இயக்கப்படுமா?.. அரசின் முக்கிய அறிவிப்பு

    75 வயதான இவர் திருமனம் செய்துகொள்ளவில்லை. எனவே தனது அக்காள் மகள்களை தனது பிள்ளைகள் போல் எடுத்து வளர்த்து தனது சொத்துகளை அவர்கள் பேரில் எழுதியும் வைத்துள்ளார்.

    கொரோனா சிகிச்சை

    கொரோனா சிகிச்சை

    இந்நிலையில் சிலவருடங்களாக அவரை அவரது உறவினர்களும் வளர்ப்பு பெண்களும் கண்டுகொள்ளவில்லையாம். கொரோனோவும் மூதாட்டியை பாதித்துள்ளது. இதில் 55 சதவீத நுரையீரல் தொற்றுடன் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் சுப்பாத்தாள்.

     சொத்துக்களை பறித்து விட்டனர்

    சொத்துக்களை பறித்து விட்டனர்

    உறவுகள் என்று யாருடைய உதவியும் இன்றி கொரோனோ வார்டில் இருக்கும் சக நோயாளிகள் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருகிறார் இவர்.
    தனது சொத்துகளை பெற்றுகொண்டு தன்னை அநாதையாக விட்டுவிட்ட உறவினர்களிடம் இருந்து தனது சொத்துகளை மீட்டு தர கோரி, கண்ணீர் விடுகிறார் சுப்பாத்தாள்.

    ஸ்டாலினுக்கு கோரிக்கை

    ஸ்டாலினுக்கு கோரிக்கை

    யாருடிய உதவியின்றி தனித்து இருக்கும் தனக்கு உதவி தன்னை காப்பாற்றும்படியும் தமிழக முதல்வருக்கு கொரோனோ வார்டில் இருப்பவர் உதவியுடன் கானொலி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    இது வாட்சாப்களில் வலம் வரும் நிலையில் உரிய உதவிவரும் என அங்கிருப்பவர்கள் ஆறுதல்கூற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் சுப்பாத்தாள்.

    English summary
    A 75-year-old woman has made a video request to Chief MK Stalin that no one care her after infected with coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X