பசு மாட்டை கடத்தி.. ரூமில் வைத்து... பாலியல் வன்புணர்வு..3 வடமாநில இளைஞர்கள் கைது
பசுமாட்டுக்கு பாலியல் தொல்லை தந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
Recommended Video
திருப்பூர்: பசு மாட்டை கடத்தி சென்று, பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள் இளைஞர்கள் 3 பேர்! இவர்கள் 3 பேருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.. பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ளது பெருமா கவுண்டன்பாளையம். இங்கு வசித்து வருபவர் கந்தசாமி என்ற விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு அவ்வப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.

எப்பவுமே நைட் நேரத்தில் நன்றாக இருக்கும் பசுமாடு, காலையில் ஆனதும் பலவீனமாக இருப்பதை கந்தசாமி கவனித்துள்ளார். இது சில நாட்களாக தொடர்ந்ததால், கவலையும், குழப்பமும் அடைந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு பசுமாட்டை வெளியே கட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் மாடு கத்தும் சப்தம் கேட்டு விழித்த கந்தசாமி, உடனே வெளியே வந்து பார்த்தார். ஆனால் பசுமாட்டை காணவில்லை. பல இடங்களில் தேட ஆரம்பித்தார்.
அப்போது அருகில் உள்ள கோழிப்பண்ணை ரூமில் இருந்து சப்தம் வருவதை கவனித்த அதனுள் சென்று பார்த்தார். அப்போது, பசுமாட்டினை அந்த அறையில் வைத்து மூன்று இளைஞர்கள் வன்புணர்வு செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் 3 பேரும் அருகில் உள்ள கல்குவாரியில் வேலை செய்பவர்கள் என்பதும், 3 பேருமே வடமாநில இளைஞர்கள் என்பதும் தெரியவந்தது.
தினந்தோறும் நைட் நேரத்தில், பசு மாட்டினை கடத்தி சென்று, அருகில் இருக்கும் கோழிப்பண்ணை ரூமில் வைத்து 3 வடமாநில இளைஞர்களும் தொடர்ந்து வன்புணர்வு சித்திரவதை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 3 இளைஞர்களையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications