திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி
திருப்பூர்: கணவன் மனைவி இடையே ஏற்படும் சந்தேகம் உண்மையில் பல குடும்பங்களில் சந்தோஷம் காணாமல் போக காரணமாக இருக்கிறது. இருவரும் வெளிப்படையாக பேசாமல் இருந்து, கடைசியாக சந்தேகப்படுவதால், குடும்பங்களில் சிக்கல் ஏற்படுகிறது. அப்படித்தான் சந்தேகத்தால் எழுந்த குடும்ப பிரச்சனையில் தனது மனைவியின் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பிய வழக்கில், தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த கணவனை இடுக்கி வண்டிப்பெரியாறு போலீஸார் கைது செய்தனர்.
இன்றைய காலகட்டத்தில் "கள்ளக்காதல்" மற்றும் "சந்தேகம்" ஆகிய இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல அதிகரித்து வருகின்றன. இதற்குப் பின்னால் சில கசப்பான உண்மைகளும் உள்ளன. ஒரு கணவன்-மனைவி இடையே பேச்சுவார்த்தை குறைந்து, ஒருவர் மற்றவரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதபோது, அந்த வெற்றிடத்தை நிரப்ப மூன்றாம் நபரின் வரவு எளிதாகிறது. "வீட்டில் கிடைக்காத அங்கீகாரம் வெளியில் கிடைக்கும்போது" மனம் அங்கே சாய்கிறது. இது கள்ளக்காதலுக்கு காரணமாகிறது.

சமூக வலைதளங்களின் தாக்கமும் கள்ளக்காதலுக்கு காரணமாக உள்ளது. முன்பெல்லாம் அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசுவது கடினம். ஆனால் இன்று இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்கள் பழைய நண்பர்களையோ அல்லது புதிய நபர்களையோ மிக எளிதாக இணைக்கின்றன. ஒரு 'லைக்' அல்லது 'கமெண்ட்' மெல்ல மெல்லத் தவறான உறவிற்குப் பாதையமைத்து வருகிறது.
இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில், தங்களுக்குள் இருக்கும் சுவாரஸ்யம் குறைந்துவிட்டதாக நினைப்பவர்கள், புதிய ஒருவரின் அறிமுகத்தில் கிடைக்கும் அந்தத் தற்காலிக 'திரில்' மற்றும் மகிழ்ச்சிக்காகத் தவறு செய்கிறார்கள். இன்று ஆண்கள், பெண்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால், அவர்களுக்குத் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் புதிய மனிதர்களுடனான பழகும் வாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. இது சில நேரங்களில் எல்லை மீறக் காரணமாகிறது.
அதேபோல் சந்தேகம் அதிகரிக்கவும் காரணங்கள் உளள்ன. "தான் அழகாக இல்லையோ?" அல்லது "தனக்குத் தகுதியில்லையோ?" என்ற தாழ்வு மனப்பான்மை ஒருவருக்கு வரும்போது, தன் துணையை யாராவது பறித்துவிடுவார்களோ என்ற பயம் சந்தேகமாக மாறுகிறது. ஒருவருக்கு ஏற்கனவே ஏமாற்றப்பட்ட அனுபவம் இருந்தால், அவர் தனது தற்போதைய துணையையும் அதே கண்ணோட்டத்தோடு பார்ப்பார்.
துணையின் மொபைல் போன் 'லாக்' செய்யப்பட்டிருப்பது, நள்ளிரவில் ஆன்லைனில் இருப்பது போன்ற சிறிய விஷயங்கள் கூடப் பெரிய சந்தேகங்களுக்கு வித்திடுகின்றன. ஒருவரை ஒருவர் 'ஸ்பை' செய்வது இன்று அதிகரித்துள்ளது. போதிய நேரத்தைச் செலவிடாத தம்பதிகளிடையே புரிதல் குறைந்து, அந்த இடத்தில் கற்பனையான பயங்களும் சந்தேகங்களும் அதிகமாகின்றன. அப்படியான ஒரு சந்தேகத்தால் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை, தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த சக்தி குமார் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வண்டிப்பெரியாறு அருகே இஞ்சிகாடு பகுதியில் வசித்து வந்தனர். சக்திகுமார் வாடகை ஆட்டோவில் ஓட்டுனராக இருந்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு நான்கு வயது, மூன்று வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவி மீது சந்தேகம் கொண்டு சக்திகுமார் மது போதையில் வீட்டில் தகராறு செய்து மனைவியை அடித்து துன்புறுத்துவதோடு, வீட்டு பொருட்களை அடித்து சேதப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். கடந்த வாரம் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான திருப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு மனைவியை மிரட்டி, அவரை நிர்வாண படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து மனைவி சொந்த ஊரான வண்டிப்பெரியாறு வந்து நடந்ததை கூறி, உறவினர்களோடு சென்று இடுக்கி எஸ்பி.,யிடம் புகார் அளித்தார். தொடர்ந்து, தேனி எஸ்.பி , மற்றும் தேனி சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் வண்டிப்பெரியாறு போலீஸார், திருப்பூரில் இருந்த சக்தி குமாரை கைது செய்தனர்.
அவரை அழைத்து வந்து, பீருமேடு முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி தொடுபுழா சிறையில் அடைத்தனர். சந்தேகத்தால் வந்த குடும்ப தகராறுக்காக கொடூர புத்தி கொண்ட கணவனால் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட மனைவியின் நிர்வாண படங்கள் இரு மாநில சைபர் க்ரைம் போலீஸார் உதவியோடு நீக்கம் செய்யப்பட்டன.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications