அதெப்படி திமிங்கலம்.. எலி தினமும் பணத்தை திருடி பதுக்குது.. சிசிடிவியால் ஷாக்கான திருப்பூர் மகேஷ்
திருப்பூர்: திரைப்படம் ஒன்றில் குரங்குகளை வைத்து பணத்தை திருடுவார்கள். அது நிஜத்தில் சாத்தியமா என்றால் வாய்ப்பே இல்லை. ஆனால் தினமும் பழக்கடையில் பணத்தை எலி ஒன்று திருடி சென்றுள்ளதாம். இது தொடர்பான சிசிடிவியை பார்த்து கடைக்காரர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதெப்படி திமிங்கலம் எலி திருடும்.. நம்புற மாதிரியா இருக்கு என்ற கேட்பவர்களுக்கு சிசிடிவியை ஆதாரம் காட்டுகிறார் கடைக்காரர். நம்புங்க பாஸ், நிஜம் தான் இந்த வீடியோவை நீங்களே பாருங்க என்கிறார்.
சரி என்ன நடந்தது என்பதை பார்ப்போம். திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தினசரி பணம் காணாமல் போவது வாடிக்கையாக இருந்திருக்கிறது.

இரவு நேரங்களில் கல்லா பெட்டியில் வைத்துச்செல்லும் பணம் மறுநாள் காலை வந்து பார்க்கும்போது இல்லாமல் இருப்பது தொடர்ந்து நடந்து வந்துள்ளது. அதெப்படி தினமும் பணம் காணாமல் போகுது.. இதை கண்டுபிடிச்சே ஆகனும் என்று நினைத்த மகேஷ்.. 100 ரூபாய், 50 ரூபாய் என வைத்து சோதித்து பார்த்திருக்கிறார். அப்போதும் பணம் மட்டும் காணாமல் போவது தொடர்ந்துள்ளது.
இதைத்தொடந்து கடையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி யார் பணத்தை திருடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்தார். இந்நிலையில் இன்று காலை கடைக்கு வந்த மகேஷ், கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணம் காணாமல் போனது கண்டார்.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த மகேஷ், அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரணம், அதிகாலை 4 மணி அளவில் பழங்களுக்கு இடையே புகுந்து வந்த எலி ஒன்று கல்லா பெட்டியில் பிளாஸ்டிக் கூடையில் வைத்திருந்த பணத்தை திருடிச்செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து கடையில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்து பார்த்தபோது எலி தங்கி இருந்த வலையை மகேஷ் கண்டு பிடித்தார்.
மேலும் இதுநாள்வரை எலி திருடிய பணம் அனைத்தும் எந்தவித சேதமும் இல்லாமல் வலைக்குள் இருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தார்.

அதிலிருந்த பணத்தை வெளியே எடுத்து எண்ணிப்பார்த்தபோது 1500 ரூபாய் இருந்ததாம். எலிகள் பொதுவாக பழம், காய்கனிகளை திருடி தின்பதை பார்த்திருப்போம். ஆனால் கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடிய எலி அதை சேதப்படுத்தாமல் வலையில் வைத்திருந்தது எப்படி என்று ஆச்சர்யமடைந்துள்ளார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications