நடிகையின் "கலர் கனவு".. நண்பர்களுடன் தங்கிவிட்டு வீட்டுக்கு வந்த மனைவி.. தலையிலடித்து கதறிய கணவர்..!

துணை நடிகையை கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: சித்ராவின் சினிமா மோகம், குடும்பத்தையே இன்று சிதைத்து சின்னாபின்னப்படுத்திவிட்டது.. சித்ராவுக்கு என்ன ஆச்சு?

செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம்.. 38 வயதாகிறது.. திருப்பூரில் உள்ள சந்தையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

மனைவி பெயர் சித்ரா.. 35 வயதாகிறது.. இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.. சித்ரா அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஆனால், டிக்டாக்கில் மோகம் ஏற்பட்டுவிட்டது.

 லைக்ஸ்

லைக்ஸ்

எப்ப பார்த்தாலும், டிக்- டாக், இன்ஸ்டாகிராமில், வீடியோ போட்டுக் கொண்டே இருப்பாராம்.. ஜிபி முத்து மாதிரி, வேலை நேரத்தில்கூட, டிக்டாக்கையே பயன்படுத்தி வந்திருக்கிறார்.. இவரது வீடியோக்களுக்கு லைக்குகளும், கமெண்ட்ஸ்களும் குவிந்தன. இதனால் எந்த நேரமும் டான்ஸ், டயலாக் என்று வீடியோவில் மூழ்கினார்.. இப்படி சோஷியல் மீடியாவிலேயே மூழ்கி கிடப்பதால், அமிர்தலிங்கம் இதனை கண்டித்திருக்கிறார்.. சித்ரா எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் மூலம் ஆண் நண்பர்களும் அறிமுகமாகி உள்ளனர்..

 பியூட்டிஃபுல்

பியூட்டிஃபுல்

சித்ராவின் வீடியோக்களை பார்த்துவிட்டு, ஹீரோயின் ரேஞ்சுக்கு உசுப்பிவிட்டுள்ளனர்.. அழகுக்கும், நடிப்பு திறமைக்கும், சினிமாவில் நடித்தால் பெரிய ஹீரோயினாக வலம்வரலாம் என்று சொல்லவும், சித்ரா கனவு வானத்திலேயே பறந்தார்.. சென்னைக்கு சென்று சினிமாவில் நடிக்க போவதாக அமிர்தலிங்கத்திடம் சொல்லி உள்ளார்.. டிக்டாக் வீடியோ போட்டதற்கே கடுப்பாகி கிடந்த அமிர்தலிங்கம், இதை கேட்டதும் இன்னும் கொந்தளித்துவிட்டார்.. சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொல்லி உள்ளார்.. சித்ரா இந்த பேச்சையும் கேட்காமல், டிக்டாக்கில் அறிமுகமான அதே நபர்களுடன் சென்னைக்கு சென்றுள்ளார்..

ரிட்டர்ன்

ரிட்டர்ன்

அங்கே சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு, ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.. இதனால், சில மாதங்கள் சென்னையிலேயே தங்கியிருந்துள்ளார்.. இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு சான்ஸ் வரவில்லை.. இதனிடையே, மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயமானது.. இந்த திருமணத்துக்காக கடந்த வாரம் சென்னையில் இருந்து சித்ரா திருப்பூருக்கு திரும்பி வந்துள்ளார். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே மறுபடியும் தகராறு வெடித்தது.. எனினும், திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளதே தவிர, தம்பதியின் சண்டை ஓயவில்லை..

 சாத்திய கதவு

சாத்திய கதவு

இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்ட சித்ரா, புதிதாக திருமணமான தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்றார். பிறகு, அக்கம்பக்கத்தினரும், 2 மகள்களும், சித்ராவையும், அமிர்தலிங்கத்தையும் சமாதானப்படுத்தி உள்ளனர். அதன்பிறகு, சித்ராவை அவரது வீட்டிற்கு செல்லுமாறும் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாக அமிர்தலிங்கம் வீட்டு கதவு திறக்கப்படாமலேயே இருந்தது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, கழுத்தில் காயங்களுடன் சித்ரா பிணமாக கிடந்ததை கண்டு அலறினார்கள்..

 சுடிதார் துப்பட்டா

சுடிதார் துப்பட்டா

இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அமிர்தலிங்கத்தையும் பிடித்து விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், சித்ரா சினிமாவில் நடிப்பது பிடிக்காததால் ஏற்பட்ட தகராறில் துப்பட்டாவாலேயே, சித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை வாக்குமூலமாக கூறினார்.. இதையடுத்து அமிர்தலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 கேரக்டர் + ரோல்

கேரக்டர் + ரோல்

அதாவது மகளுக்கு திருமணம் முடிந்து ஒருவாரம் ஆன நிலையில், மறுபடியும் சென்னைக்கு போய் சினிமாவில் நடிக்க போவதாக சித்ரா சொன்னாராம்.. இதுதான் அமிர்தலிங்கத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.. மகளுக்கு திருமணமாகிவிட்டதாலும், இன்னொரு மகள் வீட்டில் தனியாக இருப்பதாலும், நடிக்க போக வேண்டாம் என்று அமிர்தலிங்கம் சொல்லி உள்ளார்.. இதுதான் வாக்குவாதமாக வெடித்துள்ளது.. சித்ராவை கோபத்தில்தான் கழுத்தை நெரித்துள்ளார். ஆனால், அவர் மயங்கிவிடவும், வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்..

 டாப் ஹீரோயின்

டாப் ஹீரோயின்

விடிகாலை தன்னுடைய மகளுக்கு போன் செய்து, "அம்மாவை அடிச்சுட்டேன், என்னாச்சுன்னு போய் பார்" என்று சொல்லி உள்ளார்.. மகளும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது... உள்ளே சென்று பார்த்தால், சித்ரா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதற்கு பிறகுதான் போலீசுக்கு சென்றுள்ளனர்.. தலைமறைவாக இருந்த அமிர்தலிங்கத்தையும் பெருமாநல்லூரில் கைது செய்துள்ளனர்.. சினிமா மோகம் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகிறதோ?!!

ஷூட்டிங்

ஷூட்டிங்

இதையடுத்து, அமிர்தலிங்கம் போலீசில் வாக்குமூலம் தந்தார்.. அதில், "இன்னும் 2 நாளில் ஷூட்டிங் இருப்பதாகவும், இந்த முறை வேறு ஒரு நண்பருடன் சென்னை செல்லப்போவதாகவும் சொன்னாள்.. நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.. அதற்கு சித்ரா, அந்த விஷயத்தை மட்டும் யாருக்காகவும் விட்டுத்தர முடியாது, சென்னை செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சொல்லி தகராறு செய்தாள்.. சென்னைக்கு கிளம்பவும் தயாரானாள்.. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பலமுறை கூறியும் கேட்காததால் ஆத்திரத்தில் இருந்த நான், அவள் கழுத்தில் கிடந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பிறகு இது குறித்து என் மகளுக்கு போனில் சொல்லிவிட்டு, திருப்பூரில் இருந்து மதுரைக்கு தப்பி செல்லலாம் என்று புதிய பஸ் ஸ்டேண்டுக்கு சென்றேன்.. ஆனால், அதற்குள் என்னை போலீசார் பிடித்து விட்டனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+