பாஜகவினர் விமர்சித்தால் அதிமுக தாங்கிக்கொள்ளனும் - சி.பி.ராதாகிருஷ்ணன் அட்வைஸ்
திருப்பூர்: பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தால் அதிமுக தாங்கிக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவை காங்கிரஸ் இல்லாத கட்சிகளின் தலைமையிலான அரசுகள் 15 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்து இருக்கின்றன.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, 8 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார்.

இந்தியாவின் வளர்ச்சி
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 24 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக குறைந்து இருக்கிறது. உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று உள்ளது. உலக நாடுகளின் பசி, பட்டினியை போக்கும் வகையில் இந்தியா செயல்பட்டு வருகிறது. மத்திய பட்ஜெட்டில் வேளாண்மையில் 8.5 சதவீதமாக இருந்த நிதிஒதுக்கீட்டை 38.8 சதவீதமாக உயர்த்தியது பாஜக அரசு.

தமிழக நலன்
55 கோடி மக்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. வரி ஏய்ப்பு செய்வது ஜி.எஸ்.டி. வரி காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவின் வரி வருவாய் அதிகரித்து இருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளது.

அதிமுக பொறுத்துக்கொள்ள வேண்டும்
புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மக்களை முட்டாளாக்கும் வேலையை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு செய்து வருகிறது. அதிமுகவை சேர்ந்த சிலர் பாஜகவை விமர்சனம் செய்து வருகின்றனர். தங்களின் கட்சி வளர்ச்சி அடைவதற்காக அவரவர் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் பாஜக விமர்சனம் செய்தால் அதிமுக அதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக
திமுக அரசு மத்திய அரசின் நிதியால் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை செய்து வருகிறது. இந்த போக்கை திமுக அரசு கைவிட வேண்டும். திருப்பூரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்கு மறைந்த பாஜக மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பெயரை வைக்க வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications