பழிக்கு பழி.. 3 ஆண்டுகளில் 4 பேர்.. வெறியாட்டம் ஆடும் அக்னி பிரதர்ஸ்
திருப்பூர்: நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்க சபதமெடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக வெறியாட்டம் ஆடி நான்கு பேரின் தலையை சிதைத்து கொலை செய்திருக்கிறது அக்னி பிரதர்ஸ் கும்பல். ஒவ்வொரு கொலை குறித்தும் சினிமா பாணியில் பஞ்ச் டயலாக்குடன் இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக பதிவும் போட்டு போலீஸுக்கே சவால்விடுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை ஒரு கும்பல் ஓட.. ஓட விரட்டி சென்று, தலையை சிதைத்து கொடூரமாக கொலை செய்தது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் கண்ணன் என்பவர்தான் கொலை செய்யப்பட்டிருந்தார். இதன் பின்னணியை விசாரிக்கும்போது கிடைத்த தகவல்களால் காவல்துறையே அதிர்ந்து கிடக்கிறது.

சிவகங்கை மாவட்டம், ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அக்னிராஜ். சட்டக்கல்லூரி மாணவரான இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த சில நாட்களிலேயே அக்னிராஜை, மைனர் மணி நண்பர்கள் வெட்டி கொன்றனர். இதில் ஆத்திரமடைந்த அவரின் நண்பர்கள், அக்னிராஜ் கொலைக்கு, 'பழிக்கு பழி வாங்கியே தீருவோம்' என சபதம் எடுத்தனர். இதற்காக 'அக்னி பிரதர்ஸ்' என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவை தொடங்கி தகவல்களை பரிமாறியுள்ளனர்.
அதனுடன் இன்ஸ்டாகிராம் Agni Brothers, Agni Devan Bloods, Agni Spatans என்ற பெயர்களில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் அக்னிராஜ் கொலையில் சம்மந்தப்பட்ட பரமசிவம், ஆகாஷ், அழகு பாண்டி ஆகியோரை அடுத்தடுத்து சரமாரியாக வெட்டி, தலையை சிதைத்து ஒரே பாணியில் கொலை செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகதான் வினோத் கண்ணனை, சினிமா பாணியில் காரில் சேஸ் செய்து விரட்டி சென்று தலையை வெட்டி சிதைத்து கதற கதற கொலை செய்துள்ளனர். நண்பன் கொலைக்கு நான்கு பேரை கொன்று பழிவாங்கியும் அக்னி பிரதர்ஸ் ஆத்திரம் அடங்கவில்லை.
அக்னிராஜ் கொலை வழக்கில் கைதான பூச்சி இருளப்பன், விக்கி, சக்திவேல், தர்மராஜ் ஆகியோருக்கும் இந்த கும்பல் ஸ்கெட்ச் போட்டுள்ளது. ஜாமீனில் வெளிவந்துள்ள அந்த நான்கு பேரும் தலைமறைவாக உள்ளனர். "அவர்களின் கதைகளை முடிக்கும் வரை ஓயமாட்டோம்." என சமூகவலைதளங்களில் வெளிப்படையாக பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு கொலை முடிந்ததும், அது குறித்தான தகவல்கள், அடுத்து செய்ய உள்ள சம்பவங்கள் குறித்த அப்டேட்களையும் அக்னி பிரதர்ஸ் கும்பல் இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக பதிவு செய்கிறார்கள்.
"பகைக்கு வயது 3. கதைக்கு முடிவு சொல்லலாம், பகைக்கு.? அக்னியின் வேட்டை அட்டகாசமாக தொடர உள்ளது. சிந்திய ரத்தம் வீண் போகாது. விரைவில் தலைகள் சிதறும்." என்று பதிவு செய்துள்ளனர். கடைசியாக நடந்த வினோத் கண்ணன் கொலைக்கு பிறகும் கூட, "பதில் தரமாக இருந்ததா. மீண்டும் தொடரும்." என்று கண்ணன் கொலை செய்யப்பட்ட புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாகவும் வைத்துள்ளனர். ஏற்கனவே மூன்று கொலைகள் முடிந்தும், வினோத் கண்ணன் கொலைக்கு பிறகுதான் அக்னி பிரதர்ஸ் குறித்த தகவல் வெளியில் வரத்தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பல்லடம் போலீஸார் 3 தனிப்படை அமைத்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக நிதிஷ்குமார், காளீஸ்வரன், பிரபுதேவா, சாமிநாதன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. அக்னி பிரதர்ஸ் குழுவின் வெறியாட்டத்துக்கு பயந்து வினோத்தும் தலைமறைவாகவே இருந்துள்ளார். இதனிடையே இவர்களில் பிரவுதேவா, சாமிநாதன் ஆகியோர் வினோத்துடன் நட்பாக பழகி நம்ப வைத்துள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக வினோத் ஆந்திராவில் இருந்து வரும்போது, அக்னி பிரதர்ஸ்க்கு தகவல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அப்படி திட்டமிட்டுதான் வினோத் கண்ணனை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸ் தேடி வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications