திருப்பூரில் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட ஈரோடு இளைஞர்.. வாழ்நாளில் மறக்கவே மாட்டார்
திருப்பூர்: ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்திருக்கிறார்கள். இந்நிலையில் இளம் பெண் உடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட இளைஞர், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு இளம்பெண்ணின் அழைப்பில் பேரில் போயிருக்கிறார். அங்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியை சேர்ந்த 19 வயதாகும் கிருத்திகா என்ற பெண்ணுக்கும், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்திருக்கிறார்கள்.

இ்ந்தநிலையில் இளம்பெண் கிருத்திகா, ஜெகதீசனிடம் நாம் இருவரும் தனியாக உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினாராம். மேலும் அதற்காக திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள தட்டாங்கோட்டை சொட்டமேடு பகுதிக்கு வருமாறும் அழைத்து வந்திருக்கிறார்.
இதை நம்பிய ஜெகதீசன் அங்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு கிருத்திகா இருந்தாராம். இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஆடைகள் இன்றி தனிமையில் உல்லாசமாக இருந்தார்களாம். அப்போது அங்கு திடீரென 2 பேர் வந்து, தாங்கள் 2 பேரும் இங்கு என்ன? செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்களாம். தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உடைகள் இல்லாததை தங்களின் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இதையடுத்து இந்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று ஜெகதீசனை மிரட்டினார்களாம்.
தொடர்ந்து அவர்கள் 2 பேருடன் சேர்ந்து கிருத்திகாவும் பணம் கேட்டாராம். இதனால் குமாரபாளையத்தில் இருந்து ஆசையாக ஜெகதீசன் ஆடிப்போனார். வேறுவழியின்றி தான் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை அவர்களிடம் கொடுத்தார். அதன்பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டார்களாம். இதனால் செய்வதறியாமல் நின்ற அவர், இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பெருமாநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் ஜெகதீசனை மிரட்டியது ஈரோடு மாவட்டம் அறச்சலூரை சேர்ந்த கிருத்திகா மற்றும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை சேர்ந்த அருண் (33), அந்தியூரை சேர்ந்த பழனிச்சாமி (51) என்பதும் தெரியவந்தது. இளம்பெண்ணான கிருத்திகாவுடன் தனிமையில் இருக்க வைத்து நகை மற்றும் பணம் பறிக்க முயன்றதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications