திருப்பூர் ஆஸ்பத்திரியில் காதலியின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்த காதலன்.. அடுத்தும் செய்த பயங்கரம்
திருப்பூர்: திருப்பூரில் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று காதலன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் மருத்துமனைக்கு நேரடியாக சென்று காதலியை கொடூரமாக கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்டு திருப்பூர் வடக்கு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
காதலிப்பவர்கள் அல்லது ஒரு தலையாக காதலிப்பவர்கள் தங்களை அந்த பெண் பிடிக்கவில்லை என்று ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றால், அதனை மனதார ஏற்க வேண்டும். அதைவிட்டு விட்டு கழுத்தறுத்து கொல்வது என்பது மிக கேவமான செயல். ஏமாற்றங்களுக்காக இப்படியான செயல்களை செய்வது அறுவறுக்கத்தக்கது. ஒரு தலைக்காதலை ஊக்குவிப்பதும் தவறான செயல். ஒரு தலைக்காதலால் அழிந்த பெண் குழந்தைகள் ஏராளம். ஒரு தலைக்காதலால் அழிந்த குடும்பங்கள் ஏராளம்.

சரி விஷயத்திற்கு வருவோம். திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக 21 வயதாகும் சத்யஸ்ரீ இருந்து வந்தார். . இவரும் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நரேந்திரனும் (வயது 25), கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்களாம். உண்மையா என்பது தெரியவில்லை. அப்படித்தான் விசாரணையில் நரேந்திரன் கூறியுள்ளார்.
சத்யஸ்ரீக்கும், நரேந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தன்னுடன் பேச மறுத்த சத்யஸ்ரீயை இன்று காலை மருத்துவமனைக்கு சென்று நரேந்திரன் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது- அப்போது ஆத்திரம் அடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், காதலி சத்யஸ்ரீயை கழுத்தை துடிக்க துடிக்க அறுத்தார். பின்னர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார்.
இதை பார்த்து பதறிப்போன மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் சிகிச்சை பலன்இன்றி சத்யஸ்ரீ உயிரிழந்தார். நரேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்தை அடுத்து விரைந்த வந்த திருப்பூர் வடக்கு போலீசார் சத்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பெற்று வரும் நரேந்திரன் உடல் நிலை தேறிய பின்னர் அவரிடம் விசாரிக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்து வருகிறார்கள். திருப்பூரில் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று காதலன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications