நக்கீரன் கோபாலுக்கு பகிரங்க மிரட்டல்.. தமிழ்நாட்டிலேயே இருக்க முடியாது.. தவெக நிர்வாகி மீது புகார்
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை பகிரங்கமாக மிரட்டியதாக, தாராபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவசங்கர் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமூக ஆர்வலர் காவல் நிலையத்தில் வழங்கிய வீடியோவில் தவெக நிர்வாகி சுஜித் குமார் என்பவர், நக்கீரன் கோபால் வெளியில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் என்று எச்சரிக்கும் வகையில் உள்ளது.
எஸ் ஐ ஆர் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இந்நிலையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தா. வெ.க கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தவெக நிர்வாகி சுஜித் குமார், நக்கீரன் ஆசிரியர் கோபாலை அவதூறாகவும்., கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை கொண்டு விமர்சித்துள்ளார் என்று புகார் எழுந்துள்ளது. மேலும் தா. வெ.க ஆட்சிக்கு வந்தால் நக்கீரன் கோபால் தமிழகத்தில் குடியிருக்க முடியாது என்றும் கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தள்ளது.
இதுபற்றி தாராபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சிவசங்கர் என்பவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் மனு அளித்தார். அதில் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் குறித்து அவதூறாகவும், மோசமாகவும் பேசிய சுஜித் குமார் மீது வழக்கு பதிவு செய்த அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே தவெக நிர்வாகி சுஜித் குமார் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் நக்கீரன் செய்தி நிறுவனத்தின் ஆசிரியரான நக்கீரன் கோபாலை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் சுஜித்குமார் பேசுகையில், அடுத்தவர்களை மிரட்டுகிற தொனியில், வன்மைத்தை கக்கும் வகையில் பேசினாய் என்றால், திருப்பி அடித்தால் நீ தாங்க மாட்டாய் .. எங்கள் கட்சி ரசிகர்கள் போட்ட ஓட்டு பிச்சையில் 8 சதவீத வாக்குகளை வாங்கிய சீமான் அவர்களே, இப்படி பேசுவதற்கு உங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கும்.. உங்களின் திமிரை காலி செய்யவே, தளபதி விஜய் மக்கள் களத்தில் வந்துவிட்டார்.. உங்களுடைய கட்சி (நாம் தமிழர் கட்சி ) பூஜியம் தான் இந்த முறை.. சின்னமும் பறிபோக போகிறது.
தமிழ்நாட்டில் மீசை வைத்துக் கொண்டு ஒருவர் சுற்றிக்கொண்டு திரிகிறார்.. மீசை வைத்திருந்தால் மட்டுமே ஆண் மகன் இல்லை.. எவர் ஒருவர் மக்களுக்கு எதிரான திட்டங்களை ஆண்மையோடு எதிர்க்கிறானோ, அவனே உண்மையான ஆண் மகன்.. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிக்கை என்று சொல்லிவிட்டு, புரோக்கர் போல் வேலை செய்யும் நக்கீரன் கோபாலுக்கு வெட்கமாக இல்லையா. கரூர் சம்பவத்தில் தளபதி விஜய்க்கு எதிராக இட்டுக்கட்டி , வீரவசனம் பேசி, மக்களை மடைமாற்றம் செய்ய நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது. வெளியில் வரும் போது பார்த்து செல்ல வேண்டும்... தவெக தொண்டர்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவர்கள். தளபதியை இனி தாக்கினால்... ஜனநாயக முறைப்படி போனது எல்லாம் அந்த காலம்.. தொண்டர்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள்.. ஆட்சி மாறினால் தமிழ்நாட்டிலேயே இருக்க முடியாது" என்று தவெக நிர்வாகி மிக கடுமையாக எச்சரிக்கும் வகையில் வீடியோ இருந்தது.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?









Click it and Unblock the Notifications