தாய் அமமுகவில்.. மகள் காங்கிரஸில்.. திருப்பூரில் களமிறங்கும் தீபிகா அப்புக்குட்டி.. யார் இவர்?
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் 22 வயது பெண்ணுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 55 வது வார்டில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு 5 வார்டுகள்
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு திருப்பூரில் 5 வார்டுகள் ஒதுக்கி இடப்பங்கீடு நேற்று இறுதி செய்யப்பட்டது. அப்போதே அந்த 5 வார்டில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரமும் வெளியிடப்பட்டது. அதன்படி 25 வது வார்டில் பூபேஷ் , 30 வது வார்டில் முத்துலட்சுமி , 48 வது வார்டில் விஜயலட்சுமி , 51 வது வார்டில் செந்தில்குமார் , 55 வது வார்டில் தீபிகா அப்புக்குட்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபிகா அப்புக்குட்டி
இதில் 55-வது வார்டில் போட்டியிடும் தீபிகா அப்புகுட்டி என்பவர் கவனிக்கத்தவராக உள்ளார். 22 வயது ஆன தீபிகா அப்புக்குட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருடைய தாய் விசாலாட்சி அதிமுக கட்சியில் திருப்பூர் மாநகரின் மேயராக பதவி வகித்தார்.

அமமுக
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் தெற்கு தொகுயில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போதும் விசாலாட்சி அமமுகவில் தான் உள்ளார். தாய் அமமுகவில் இருக்கும் போதே அவரின் மகள் தீபிகா அப்புகுட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கவுன்சிலராக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியதர்ஷினி
தமிழ்நாடு பிரியதர்ஷினி காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் திருப்பூர் தீபிகா அப்புக்குட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications