திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திண்டுக்கல் சென்றுவிட்டு ரிட்டன்.. கரும்பு காட்டுக்குள் சென்ற சின்னத்தம்பி.. இப்போது எங்கு உள்ளது?

திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில் இருந்து முகாமிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கரும்பு காட்டுக்குள் சென்ற சின்னத்தம்பி.. இப்போது எங்கு உள்ளது?

    திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில் இருந்து முகாமிட்டு இருக்கிறது.

    கடந்த ஜனவரி 25ம் தேதி கோவையில் இருக்கும் தடாகம் பகுதியில் இருந்து சின்னத்தம்பி யானை இடமாற்றம் செய்யப்பட்டது. சின்னத்தம்பி விவசாய நிலங்களை நாசம் செய்கிறது என்று சில விவசாயிகள் புகார் அளிக்கவே இது இடமாற்றம் செய்யப்பட்டது.

    வனத்துறை அதிகாரிகள் இதை பிடித்து சென்று டாப்சிலிப் காட்டுப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் அங்கிருந்து அது தப்பித்து வெளியே வந்தது. தற்போது இது மீண்டும் தடாகம் காட்டு பகுதியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

    நேற்று எங்கு இருந்தது

    நேற்று எங்கு இருந்தது

    நேற்று சின்னத்தம்பி யானையின் கூடாரம் காலி செய்யப்பட்டதால் அது உடுமலைப்பேட்டை வயல் பகுதிகளுக்குள் சென்றது. இந்த நிலையில் நேற்று மாலை திருப்பூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சின்னத்தம்பி யானை சென்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் பகுதிக்கு நேற்று மாலை சென்றது.

    இன்று காலை

    இன்று காலை

    இந்த நிலையில் இன்று காலை சின்னதம்பி மீண்டும் திருப்பூர் மாவட்ட பகுதிக்கு திரும்பியது. திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புத்தூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை இன்று அதிகாலையில் இருந்து முகாமிட்டு இருக்கிறது. அங்கிருக்கும் கரும்புகளை சாப்பிட்டுக்கொண்டு, தோட்டத்தின் நடுவில் முகாமிட்டபடி இருக்கிறது.

    கும்கி யானை

    கும்கி யானை

    சின்னத்தம்பி யானையை கும்கி யானை வைத்து கூட சரியாக விரட்ட முடியவில்லை என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். சின்னத்தம்பியை விரட்ட வந்த கும்கி யானையான மாரியப்பனுடன் சின்னத்தம்பி மிகவும் நட்புடன் பழகியது குறிப்பிடத்தக்கது. அதனால் சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்ட கும்கி யானையை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.

    தாமதம்

    தாமதம்

    சின்னத்தம்பியை விரட்டுவது தற்போது தமிழக வனத்துறை அதிகாரிகளுக்கு சிரமமான விஷயமாக மாறி உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் சின்னத்தம்பி முகாமிட்டு முகாமிட்டு செல்வதால் அதை விரட்டுவதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சின்னத்தம்பி அடர்ந்த காட்டு பகுதிக்கு செல்ல ஒரு வாரமாவது எடுக்கும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Going towards Tiruppur: Current position and location of Elephant Chinnathambi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X