Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோட்டையில் "ஓட்டை".. இதென்ன புதுஸா கிளம்புதே.. திமுகவை விடுங்க.. சிக்கலில் எடப்பாடியின் "வலது கரம்"?

எடப்பாடி பழனிசாமியின் கொங்கு கோட்டைக்குள், அதிமுக மாஜி அமைச்சர் மீது எதிர்ப்பு கிளம்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமாருக்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வருகின்றன.. அவரை தமிழக காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு என்ஐஏ புலன் விசாரணையை துவக்கிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வெடித்துள்ளன.

கடந்த வாரம், எடப்பாடி பழனிச்சாமி விமான நிலைய ஓடுதள பஸ்ஸில் பயணம் செய்தபோது, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரும் பயணித்தார்.

அமமுகவை சேர்ந்த ராஜேஸ்வரன் திடீரென முழக்கமிட்டார். துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் பண்ணியவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார்.

துரோகி

துரோகி

அதை ஃபேஸ்புக்கில் அவர் லைவ் செய்வதை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், செல்போனை வேகமாக பறித்தார். உடனே அதிமுகவினர் பஸ்ஸில் இருந்து ராஜேஸ்வரனை கீழே இறக்கி தாக்கி விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். ராஜேஸ்வரன் மீது ஏர்போர்ட் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ராஜேஸ்வரனை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் சென்ற அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்..

 கண்ணியம்

கண்ணியம்

அந்தவகையில், கடந்த 13ம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார், ஸ்டாலினுடைய ஏவல் துறையாக காவல்துறை கண்ணியம் இழந்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யும் சர்வாதிகார போக்கு தொடருமானால் மதுரையில் அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள். மதுரை அதிமுக தொண்டர்கள் ஜெயிலுக்கு போவதற்கு பயந்தவர்கள் இல்லை. பல ஜெயில்களை நாங்கள் பார்த்துள்ளோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் வெறும் டிரையிலர் தான். திமுகவின் பூச்சாண்டிக்கு அதிமுக பயப்படாது" என்று பேசியிருந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

 சம்மட்டி அடி

சம்மட்டி அடி

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதால் அவரை கைது செய்யக்கோரி மதுரை சம்மட்டிபுரம் திமுக பகுதி கழக செயலாளர் தவமணி சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், 'தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை துாண்டும் விதமாக பேசியுள்ளார். சட்டவிரோதமாக வெடிகுண்டு கலாசாரத்தை துாண்டும் விதமாக பேசிய உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்..

 பரபர போஸ்டர்ஸ்

பரபர போஸ்டர்ஸ்

அதேபோல, அஇஅதிமுக திருப்பூர் மாநகர மாவட்ட கழக நிர்வாகிகள் 2 பேர் சார்பிலும் புகார் தரப்பட்டுள்ளது.. திருப்பூர் மாநகரத்தின் ரயில் நிலையம், பஸ் நிலையம், புஷ்பா தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் போஸ்டர்கள் ஒட்டப்படுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித வெடிகுண்டாக மாறுவேன் என பொதுவெளியில் பேசிய முன்னாள் அமைச்சர் RB.உதயக்குமாரை தமிழக காவல்துறை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், மத்திய அரசு NIA புலன் விசாரணையை துவக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது...

 கோட்டையில் ஓட்டை

கோட்டையில் ஓட்டை

ஆர்பி உதயகுமாருக்கு எதிராக, ஒருபக்கம் திமுகவிலும், மற்றொருபக்கம் அதிமுகவிலும் கிளம்பி உள்ளது, எடப்பாடி கூடாரத்தை அதிர வைத்து வருகிறது.. அதிமுகவில் தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருபவர் ஆர்பி உதயகுமார் ஆவார்.. இன்னும் சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த நிலையில், ஆர்பி உதயகுமார்தான் கட்சியில் இடம்பெற்று வருகிறார். மேலும், தென்மண்டல வாக்குகளை தன்பக்கம் திருப்புவதற்காக, நிறைய பொறுப்புகளை உதயகுமாருக்கு எடப்பாடி பழனிசாமி தந்தும் அழகுபார்த்து வருகிறார்.. அப்படி இருக்கும்போது, உதயகுமாருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருவதும், அதிலும், எடப்பாடியின் கோட்டையான கொங்குவிலேயே, இப்படி ஒரு எதிர்ப்பினை சொந்த கட்சியினர் பதிவு செய்துள்ளதும், ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் தந்து வருகிறதாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+