உடனே? ஜவாஹிருல்லா கேட்டதுமே, ஓகே சொல்றாரே ஸ்டாலின்? இந்துக்களுக்கு "பச்சை துரோகம்".. யார்னு பாருங்க
திருப்பூர்: இட ஒதுக்கீடு சலுகைகளை இந்துக்களிடம் இருந்து பறித்து பங்கு போட ஆலோசனைக்குழு அமைத்தால், அதை எதிர்த்து இந்து முன்னணி சட்ட போராட்டத்தை நடத்தும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 பிப்ரவரி 2024 அன்று, முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.. அப்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இஸ்லாத்தைத் தழுவிய அறிவிக்கப்படாத சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கான இடஒதுக்கீட்டை நீட்டிப்பது குறித்து ஆராய்வதற்கான மாநில அரசின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின்: குறிப்பாக, சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்கான இன்னொரு நடவடிக்கையாக பார்க்கக்கூடிய வகையில், இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) தனி நபர்களுக்கு இடஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது குறித்து திமுக அரசு சிந்திக்கத் தயாராக உள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இஸ்லாமியர் : "தமிழக சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, இஸ்லாமியராக மதம் மாறிய ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு, அதே இட ஒதுக்கீடு சலுகை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடனே முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து ஆவண செய்யப்படும் என்று பதில் அளித்திருந்தார்.
சிறுபான்மை நலன் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அது செல்லுபடியாகாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது. ஓட்டு வங்கி அரசியல் லாபத்துக்காக இந்துக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வரிப்பணம்: மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் எந்தவொரு சிறுபான்மை பள்ளி, கல்லுாரிகளிலும் ஹிந்துக்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்குவதில்லை. அதற்கு திராவிட அரசியல் கட்சிகள் துணை போகின்றன. ஆனால், இந்துக்களுக்கான சலுகையை இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து ஹிந்துக்களுக்கு துரோகம் செய்ய, இந்த திராவிட அரசியல் கட்சிகள் கட்சிகள் தயங்குவதில்லை.
இட ஒதுக்கீடு சலுகைகளை இந்துக்களிடம் இருந்து பறித்து பங்கு போட ஆலோசனைக்குழு அமைத்தால், இந்து முன்னணி எதிர்த்து சட்ட போராட்டத்தை நடத்தும். திராவிட அரசியல் கட்சிகளின் சதியை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஓட்டுகள் மூலம், துரோகம் செய்யத் துணிந்த திராவிட கட்சிகளை வரும் தேர்தலில் தோற்கடிக்க முன்வாருங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் காடேஸ்வரா சுப்ரமணியம்.












Click it and Unblock the Notifications