Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிருக்கு முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கும் ஸ்டாலின்? திருப்பூரில் தொடங்கிய திமுக மகளிர் அணி மாநாடு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு தொடங்கி நடந்து வருகிறது.. கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மகளிருக்கு முக்கிய வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாக அரசியல் கட்சிகள் தற்போதே பிரசார பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

Tiruppur MK Stalin dmk Kanimozhi

திமுக மகளிர் அணி மாநாடு

குறிப்பாக ஆளும் திமுக மண்டல வாரியாக இளைஞர் அணி, மகளிர் மாநாட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது..

இந்த மாநாட்டுக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான கனிமொழி தலைமை தாங்குகிறார். முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். இந்த மாநாட்டில் மகளிருக்கான முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1.5 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்

இந்த மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் மொத்தம் 1.5 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் செய்துள்ளனர். மைதானம் முழுவதும் சிவப்பு நிற தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளது.

2,500 போலீசார் பாதுகாப்பு

அதேபோல, 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கையும் போடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. டாய்லெட் வசதி, குடிநீர் வசதி, சிற்றுண்டி வசதியும் செய்து தரப்படுகிறது. ஸ்னாக்ஸ் உள்ளிட்டவையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு திடல் முழுவதும் திமுக கொடிக்கம்பங்கள், மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்த ஏதுவாக 140 ஏக்கர் பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவை - திருச்சி நெடுஞ்சாலை அருகே மாநாடு நடைபெற இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் உரிய நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர். இந்த மாநாட்டுக்காக சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+