Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலி ஆதார் அட்டை மூலம் ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு.. திருப்பூரையே திகைக்க வைத்த பெண்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் இறந்தவர் பெயரிலான ஆதார் அட்டையை வைத்து ரூ.15 கோடி மதிப்பிலான 8 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பெண் மீது விவசாயிகள் 4 பேர் புகார் அளித்துள்ளனர்.. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்தனர்..

Do you know how Rs.15 crore land was seized in Tirupur through fake Aadhaar card?

இது தொடர்பாக கூறப்படுவதாவது : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் என ஒவ்வொருவருக்கும் தலா 2 ஏக்கர் விவசாய நிலத்தை தமிழக அரசு வழங்கியது. மேற்படி நிலத்தை அவர்கள் தான் நிலத்தை அனுபவித்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில், அதற்குப் பக்கத்து நிலத்துக்காரரான, ஊர்மிளா ஸ்ரீதர் என்பவர் அந்த நிலங்களை விலைக்குக் கேட்டு வந்தார்.இந்த நிலையில் ஊர்மிளா ஸ்ரீதருக்கு அந்த நிலத்தை விலைக்குத் தர இயலாது ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் ஆகிய நான்கு பேரும் மறுத்துள்ளனர்.

அதனை அடுத்து, மேற்படி 4 பேரது நிலங்களையும் போலியான ஆவணங்களைத் தயாரித்து, ஊர்மிளா ஸ்ரீதர் தனது பெயரில் பதிவு செய்து மோசடி செய்துவிட்டாராம். இதுபற்றி ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் ஆகியோர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் ஊர்மிளா ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் ஆகிய 4 பேரும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மற்றாரு மனு ஒன்றை கொடுத்துள்ளனர். ஊர்மிளா ஸ்ரீதரை கைது செய்து தங்களது நிலத்தின் பெயரிலான போலி ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளனர்.

Do you know how Rs.15 crore land was seized in Tirupur through fake Aadhaar card?

இது குறித்து அவர்கள் கூறுகையில், "ஏற்கனவே இறந்து போனவர்களின் ஆதார் அட்டைகளின் மூலமாக எங்களது ஆதார் அட்டைகளைப் போலியாகத் தயாரித்து விவசாயம் செய்வதற்காக அரசு எங்களுக்கு வழங்கிய நிலங்களைத் தனது பெயருக்கு ஊர்மிளா ஸ்ரீதர் ஆவண மாற்றம் செய்திருக்கிறார்.

ஊர்மிளா ஸ்ரீதர் எங்கள் ஒவ்வொருவருடைய இரண்டு ஏக்கர் வீதம் 8 ஏக்கர் நிலத்தை மோசடியாக ஆவணப்பதிவு செய்து, தனது பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். மோசடி செய்த நிலத்தின் மதிப்பு 15 கோடி ரூபாய் ஆகும். இந்த மோசடியில் ஈடுபட்ட ஊர்மிளா ஸ்ரீதரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்மிளா ஸ்ரீதரிம் உள்ள நிலத்திற்கான போலி ஆவணங்களை மீட்டு எங்கள் நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்"" என்று கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+