பிரதமரே! பிரதமரே! தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? திருப்பூரில் கறுப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்!
திருப்பூர்: 2019 லோக்சபா தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து பிரதமர் மோடி வருகைக்கு எதிராக திருப்பூர் அவிநாசிபாளையத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்றும் நாளையும் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கேரளாவில் இருந்து இன்று பிற்பகல் திருப்பூர் வருகை தரும் பிரதமர் மோடி, மாலையில் பல்லடம் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வந்தார். இந்த பாதயாத்திரையின் நிறைவு விழாவாக பல்லடம் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களான ஜிகே வாசன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இதனையொட்டி திருப்பூர் பல்லடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறை தண்டனை விதித்து வருவதை தடுக்க வலியுறுத்தியும் இலங்கை சிறைகளில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்திருந்தார். இதனடிப்படையில் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமார் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் திருப்பூர் அருகே அவிநாசிபாளையம் அழகுமலை பிரிவில் இன்று திடீரென 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் கறுப்பு கொடி, பலூன்களில் ஒன்று திரண்டனர். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என கறுப்பு கொடிகளுடன் விவசாயிகள் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது கறுப்பு பலூன்களையும் விவசாயிகள் பறக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications