ஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும்... அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
Subscribe to Oneindia Tamil
கோபிசெட்டிபாளையம் : பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அரசின் முடிவிற்கு பின் அறிவிக்கப்படும் என்றார்.

11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 12-ம் வகுப்பை முடித்து சென்றோருக்கு ஜனவரி மாதம் இறுதிக்குள் மடிக்கணினி தரப்படும்.
கல்வியாளா்களின் கருத்துக்களை மாணவா்களிடம் எடுத்துச்செல்ல புதிய தொலைக்காட்சி தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications