Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கு வந்த மகளிர் உரிமை தொகை எஸ்எம்எஸ்.. வெளிச்சத்திற்கு வந்த மிகப்பெரிய மோசடி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் மகளிர் உரிமை திட்டத்தின் காரணமாக பலே ஜிஎஸ்டி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி என்றால் என்னவென்றே தெரியாத பெண்கள் ஜிஎஸ்டி கட்டியதாக எஸ்எம்ஸ் வந்துள்ளது. இதனால் ஏழை பெண்களின் பான் கார்டு ஆதார் கார்டை பயன்படுத்தி சிலர் திருப்பூரில் ஜிஎஸ்டி மோசடி நடத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி பேருக்கு வழங்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது. ஆனால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கட்டியவர்கள், வருமான வரி கட்டியவர்கள், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளர்வர்கள், குடும்பத்தில் யாராவது ஒருவர் வருமான வரி கட்டியது தெரியவந்தாலும் அந்த குடும்பத்திற்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படவில்லை..

GST fraud has come to light in Tirupur due to magalir urimai thogai

ஒரு குடும்பத்தில் யாராவது அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்றாலும் அவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படவில்லை. மேலும் அதிக நிலம் வைத்திருப்பவர்கள், பணக்காரர்கள், அரசு ஊழியர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படவில்லை..மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் இந்த காரணத்தால் தான் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான கால அவகாசம் கடந்த மாதம் 24ம் தேதியுடன் முடிவுற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் திருப்பூரில் ஜிஎஸ்டி என்றால் என்னவென்றே தெரியாத சாயப்பட்டறையில் வேலைபார்க்கும் பெண்கள் ஜிஎஸ்டி கட்டியதாக மகளிர் உரிமை தொகை திட்டத்தில் காட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.விசாரித்த போது தான் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. திருப்பூர் மாநகர் சாயப்பட்டறை தெருவிலுள்ள பல பெண்களின் ஆதார், பான் விவரங்களை பயன்படுத்தி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளது.

தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்களின் விவரங்களை வைத்து, அவர்களின் பெயரில் பொய்யான நிறுவனங்களை சிலர் திருப்பூரில் உருவாக்கி உள்ளனர். இந்தபெண்களின் விவரங்களை பயன்படுத்தி ஜிஎஸ்டி கணக்குகளை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்துள்ளனர். தனது கம்பெனி வருமானத்தை வேறு வேறு பான் கார்டுக்கு மாற்றி கணக்கு காட்டி மோசடி செய்துள்ளனர். கூடுதல் வரி செலுத்துவதை தவிர்க்க இப்படி முறைகேடு செய்துள்ளனர் சிலர்.

மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பெண்கள் பலர் ஜிஎஸ்டி செலுத்தியதாக பான்கார்டு விபரம் தெரிவித்தது. ஜிஎஸ்டி செலுத்தியதால் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்ததால் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர்.விரைவில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+