திருப்பூரில் வெடித்தது குண்டு! உளவுத்துறை என்ன செய்தது? உடனே விசாரிக்கணும்.. அரசுக்கு பறந்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற வெடி விபத்தில் மூன்று பேர் பலியான நிலையில் மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் பாண்டியன் நகர் பகுதியில் சத்யா காலணியில் கார்த்தி என்பவர் கோயில் விசேஷங்களுக்கு நாட்டு வெடிகள் தயாரித்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிச் சத்தம் கேட்டது.

tiruppur hindu munnani kadeswara subramaniam

இதில் கார்த்தியின் வீடு சேதம் அடைந்ததோடு அருகில் இருந்த வீடுகளும் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் மூன்று பேர் பலியான நிலையில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து நில அதிர்வு அந்த பகுதியில் ஏற்பட்ட நிலையில் பல வீடுகள் இடிந்து விழுந்தன.

இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில், திருப்பூரில் குண்டு வெடிப்பு உயர் மட்ட விசாரணை தேவை என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திருப்பூர் பாண்டியன் நகரில் மளிகை கடை மற்றும் வீடு ஒன்றில் வெடிகுண்டு தயாரித்து வந்ததாக தெரிகிறது. மர்மமான முறையில் இன்று (8.10 .24- செவ்வாய் ) மதியம் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் சுற்றி இருந்த பல வீடுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பகுதியில் ஆபத்தான வெடி மருந்துகள் மிக அதிக அளவில் எப்படி எடுத்து வரப்பட்டது என்பது உட்பட பல சந்தேகங்களை இச்சம்பவம் எழுப்பி இருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் வெடிக்காத நிலையில் பெரிய உருண்டை வடிவிலான குண்டுகள் இருப்பதை காணமுடிந்தது. இதுக்கு மேலாக அங்கு வெடி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெரிய அளவில் வெடி மருந்துகள் வெளியே எடுத்து வரப்படுவதும், கொண்டு செல்லப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இது எப்படி காவல்துறைக்கு தெரியாமல் போனது, உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துள்ளது என்பதை இந்தச் சம்பவம் தோலுரித்துக் காட்டுகிறது. தமிழக அரசு சித்தாந்த எதிரிகளை பழி வாங்குவதில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தி வருகின்றது. இது போன்ற சட்டவிரோத, வெடிமருந்து பதுக்கல்களையும் வெடிகுண்டு தயாரிப்பு சம்பவங்களையும் உள்நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் அரசு கவனத்தில் கொள்வதில்லை.

உளவுத்துறை மற்றும் காவல் துறையை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே திமுக அரசு பயன்படுத்துகிறது. மக்கள் நலன், மக்கள் உயிர் போன்றவற்றை துச்சமாக மதித்து தமிழக அரசு செயல்படுகிறது. காவல்துறையையும் உளவுத்துறையையும் புதுப்பித்து சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணை குழு அமைக்க வேண்டுமென தமிழக அரசை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

மேலும் இந்த வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு தலா 50 லட்சமும், காயமுற்றவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் நிவாரண நிதி அறிவிக்க வேண்டும். வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு மொத்த செலவையும் அரசே ஏற்றுக்கொண்டு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+