திருப்பூரில் பயங்கரம்! நள்ளிரவில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படு கொலை! ஒருவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் வீட்டருகே 3 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். திருப்பூர் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
திருப்பூர் குமாரனந்தபுரம் காமராஜர் தெருவில் வசித்து வந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். மேலும் அவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாலமுருகன் பிணமாக கிடந்துள்ளார். நள்ளிரவு 4 மணியளவில் 3 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த திருப்பூர் மாநகர போலீசார் அப்பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் இச்சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications