பாயிண்டை பிடித்த அரசு ஊழியர் .. ஒரே குற்ற எண்ணில் 2 வழக்குகள் எப்படி.. ஹைகோர்ட்டில் திருப்பம்
திருப்பூர்: தனது தாய்க்கு சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்கான தடையில்லா சான்று பெற திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் விண்ணப்பம் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் நாகராஜன் லஞ்சம் கேட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே குற்ற எண்ணில் எப்படி 2 வழக்குகள் பதிவு செய்ய முடியும் என்று திருப்பூர் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தது உறுதியானாலோ அல்லது லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக சிக்கினாலோ, அவர்கள் தப்பிப்பது மிக கடினம். அவர்களின் சர்வீஸ் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள். சஸ்பெண்ட் நடவடிக்கையும் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் மீது பாயும்.

அதேபோல் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி அதிக அளவில் சொத்து சேர்த்ததாக எழுந்த புகார்களுக்கு போதிய ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு போனாலும், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளில் எந்த சமரசமும் அடுத்து கிடையாது.
நீதிமன்றத்தில் போய், முறையிட்டு வழக்கில் இருந்து விடுதலையாகி வருவது தான் அரசு ஊழியர்களுக்கு உள்ள ஒரே வழியாகும். அப்படித்தான் திருப்பூரில் வருவாய் ஆய்வாளர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்வியை பற்றி பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், தனது தாய்க்கு சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்கான தடையில்லா சான்று பெற விண்ணப்பத்திருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது அறிக்கை அளித்து, தாசில்தாருக்கு பரிந்துரை செய்வதற்காக வருவாய் ஆய்வாளர் நாகராஜன் என்பவர் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அசோக்குமார் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், வருவாய் ஆய்வாளர் நாகராஜன் மீது திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தைல் வருவாய் ஆய்வாளர் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருப்பூர் வருவாய் ஆய்வாளர் நாகராஜனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்வதற்கு சில நாட்கள் முன்பு, அதே குற்ற எண்ணில், அதே புலன் விசாரணை அதிகாரி வேறொரு நபருக்கு எதிராக வழக்கை பதிவு செய்திருக்கிறார் என்று கூறி அந்த ஆவணத்தை மனுதாரர் தரப்பு வக்கீல் தாக்கல் செய்தார்.
இதை படித்து பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி, 'ஒரே குற்ற எண்ணில் 2 வழக்குகள் எப்படி பதிவு செய்ய முடியும்?' என்று கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த வழக்கை பதிவு செய்த திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications