திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இளைஞர்களுக்கு அரசு தரும் உதவி
திருப்பூர்: தமிழ்நாட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கடந்த 1ம் தேதியுடன் தொடங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் இது தொடர்பாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதில், 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை புதுப்பித்து, கடந்த மார்ச் 31ம் தேதி நிலையில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருந்தால் போதுமானது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி., நர்சிங் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. அரசின் பிற துறைகளில் உதவித்தொகை பெற்று வருவோர் மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உதவித்தொகை பெற முடியாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் வரும் ஜூன் 10ம் தேதிக்குள், அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்ட பிரிவில் வழங்கலாம்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெறுவதற்கு அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவங்கிய புத்தகத்துடன், நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம் மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த பணம் மாதம் மாதம் வங்கி கணக்கில் வழங்கப்படுவது இல்லை. இது வங்கி கணக்கில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது ஆகும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதும் கிடையாது. அதேநேரம் அரசின் முதியோர் உதவித்தொகை (OAP) பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு - ரூ.600/ கிடைக்கும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (HSC-Passed) - ரூ.750/ கிடைக்கும். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (DEGREE-Passed) - ரூ.1000 கிடைக்கிறது.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.
தொலைதூரக்கல்வி மற்றும் தபால் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். https://employmentexchange.tn.gov.in/என்ற இணையதளத்திலோ அல்லது திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ சென்று படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications