ஒற்றை வாதம்.. உடைத்து வெளியே வந்த கவின் தரப்பு.. திருப்பூர் ரிதன்யாவின் தந்தை கலங்கியபடி பேட்டி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா வாழ்க்கையை முடித்துக் கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் வருத்தம் அடைந்துள்ள ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, சட்டத்தையும், நீதியையும் மதிக்கிறேன். சட்டப்படி அடுத்து நாங்கள் போராட தயாராகி வருகிறோம் என்று கூறினார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா வாழ்க்கையை முடித்துக் கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ரிதன்யாவின் முழுமையான உடற்கூராய்வு, தடயவியல் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

ஜாமீன் கேட்டு மனு
இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், திருமணத்திற்கு முன்பே ரிதன்யா தற்கொலை மனநிலையில் இருந்திருக்கிறார். திருமணத்தில் அவருக்கு விருப்பமும் இல்லை. வரதட்சணை துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
ஆதாரங்கள் உள்ளன
விசாரணை நிலைகுறித்த அறிக்கையை தாக்கல் செய்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ரிதன்யாவின் ஆடியோ மெசேஜ் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார். ரிதன்யாவை துன்புறுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் மனுதாரர்கள் செல்வாக்கானவர்கள் என்பதால் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக சுட்டி காட்டினார்.
ஜாமீன் வழங்கிய நீதிபதி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது. எனவே மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை எனக் கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் மூவருக்கும் நீதிபதி ஜெயசந்திரன் நிபந்தனை விதித்தார்.
ஒரு லட்சம் ரூபாய்க்ககான பிணை
மேலும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான இரு நபர் பிணையை அவிநாசி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அவிநாசி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதையடுத்து நிபந்தனை ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்.
ரிதன்யாவின் தந்தை பேட்டி
ரிதன்யாவின் அப்பா அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும் போது, "ரிதன்யா வழக்கு திருப்பூர் செசன்ஸ் கோர்டுக்கு வந்தது. அப்போது கவின் குடும்பத்தினர் பெயில் அப்ளிகேசன் போட்டிருந்தார்கள்.. நாங்கள் தடை மனு போட்டிருந்தோம். செசன்ஸ் கோர்டில் பெயில் தள்ளுபடி செய்துவிட்டார்கள். அடுத்ததாக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அங்கும் அவர்களுக்கு பெயில் வழங்கக்கூடாது என்று இடையிட்டு மனு தாக்கல் செய்திருந்தோம்.
பெரிய வருத்தம்
ஆனால் 55 நாட்களுக்கு பிறகு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள், கவின் குடும்பத்தினருக்கு கண்டிசன் பெயில் கொடுத்துவிட்டனர். இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது. மகளை இழந்துவிட்டேன். அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன். ஆனால் இருந்தாலும் சட்டத்தையும், நீதியையும் மதிக்கிறேன். சட்டப்படி அடுத்து நாங்கள் போராட தயாராகி வருகிறோம்.
சிபிஐ விசாரணை
அதேநேரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்டு ரிட் மனு போட்டிருக்கிறோம். அந்த வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது.. அந்த வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். சட்டத்தை நம்புகிறேன். நீதியரசர்களை நம்புகிறேன்.. தமிழக அரசிடமும் முறையிட்டுள்ளோம். அவர்களும் நீதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்கள். என் பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வளவு தான் வழியா
உலகத்தில் இருக்கும் எல்லா மக்களுக்கும் நான் சொல்லும் கருத்துக்கள் என்னவென்றால், என் மகளை இழந்துவிட்டேன். அந்த வேதனையில் இருந்து எப்படி வருவது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் பெண்களுக்கு சட்டத்தில் இவ்வளவு தான் வழியா.. இவ்வளவு தான் காலஅவகாசமா.. அப்படீன்றத நினைக்கும் போது, ரொம்ப வருத்தமாக இருக்கு.. இதனை எப்படி சொல்வது என்று தெரியலை.. நீதியரசர்களும் பார்த்து, தயவு கூர்ந்து, என் பெண்ணுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறினார்.
அரசியல் பின்புலமா
செய்தியாளர் ஒருவர் அவரிடம் பேசும் போது, ஜாமீனில் வெளிவந்த கவின் குடும்பத்தினர், அரசியல் பின்புலம் உள்ளவர்கள். அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தத்தில் அரசியல் பின்புலம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு ரிதன்யாவின் தந்தை, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று தான் நான் நினைக்கிறேன்.. நீதியரசர்களையும் நான் நம்புகிறேன். அங்கு அரசியல் பின்புலம் இருக்கிறதா இல்லை என்பது எனக்கு தெரியவில்லை.. எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். கவின் வீட்டில் தான் என் மகளின் நகைகள் மற்றும் உடமைகள் உள்ளன. அதனை இன்னும் ஏன் நீதித்துறையிடம் காவல்துறை ஒப்படைக்கவில்லை என்று தெரியிவில்லை" இவ்வாறு கூறினார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications