திருப்பூர் அருகே மாமியாரை கொன்ற மருமகன் 14 வருடங்கள் கழித்து கைது.. சிக்கியது எப்படி?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மாமியாரை வெட்டிக் கொலை செய்து விட்டு, மனைவியையும் வெட்டி விட்டு தப்பி ஓடியவர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைதாகி உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் கல் குவாரியில் வேலை செய்து வந்த ராஜன், சம்பவம் நடந்த 14 வருடங்களுக்கு முன்பு தப்பி ஓடியவர், சிக்கவே இல்லை.. யாருக்கும் தெரியாமல் அடையாளத்தை மாற்றி, மங்களூரில் வேலை செய்தவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி-காளியம்மாள் தம்பதிக்கு பத்மாவதி என்ற மகள் இருந்தார். பழனிச்சாமி, காளியம்மாள் தம்பதி,கர்நாடகா மாநிலத்தில் கல் குவாரியில் வேலை செய்து வந்த பரமசிவம் மகன் ராஜன்(வயது 45) என்பவருக்கு தங்கள் மகன் பத்மாவதியை திருமணம் செய்து வைத்தனர். ராஜன், பத்மாவதி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் கணவனுடன் கோபித்துக் கொண்டு பத்மாவதி குழந்தைகளுடன் தாய் வீடான மடத்துக்குளத்தையடுத்த வேடப்பட்டிக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவியைத் தேடி வேடப்பட்டி வந்த ராஜன் அவரை தன்னோடு வாழ வருமாறு அழைத்திருக்கிறார். அதற்கு பத்மாவதி வர மறுத்தார். தன் மனைவி தன்னோடு வராமல் போனதற்கு மாமியார் காளியம்மாள் தான் காரணம் என்று ராஜன் நினைத்துள்ளார். அதனால் கடந்த 28-06-2010 அன்று இரவு 10 மணியளவில் அரிவாளால் மாமியாரின் தலையை வெட்டி பயங்கரமாக கொலை செய்தார். மேலும் மனைவி பத்மாவதியையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார்.
இதனிடையே பத்மாவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த பத்மாவதியை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ராஜன் அதற்குள் எங்கோ ஓடிச்சென்று தலைமறைவானார். இதுகுறித்து மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த போலீசார் காளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காளியம்மாளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கும் செய்யப்பட்டது.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை தேடி வந்தனர். இந்த சம்பவம் நடந்து 14 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் ராஜன் கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து மங்களூருக்கு விரைந்து சென்ற மடத்துக்குளம் போலீசார் ராஜனை கைது செய்து மடத்துக்குளம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் குற்றவாளியை கைது செய்த போலீசாரை வெகுவாக பாராட்டினார்,. பின்னர் ராஜனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications