ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட குட்நியூஸ்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் செய்ய வேண்டுமா? ரேஷன் கார்டில் உங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க வேண்டுமா? அல்லது ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டுமா? ரேஷன் கார்டில் பொருட்கள் விநியோகம் தொடர்பான ஏதேனும் குறைகள் உள்ளதா, மண்டலம் விட்டு மண்டலம் மாறப்போகிறீர்களா? ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து குறைகளுக்கும் உடனடி தீர்வாக வரும் ஏப்ரல் 12ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
ரேஷன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வீட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்த ஆப்களை திறந்தாலே முடியும். ஆன்லைனில் ஓபன் பண்ணி, உறுப்பினர்களை சேர்க்க முடியும். அதேபோல் குடும்ப உறுப்பினர்களை நீக்கவும் முடியும். உங்கள் வீட்டு கேஸ் பில் இருந்தாலே ஏரியா விட்டு ஏரியா போனாலும் ரேஷன் கார்டை ஒரு வாரத்தில் மாற்றிவிட முடியும். ஆனால் ஆன்லைன் செயல்முறைகளை பற்றி தெரியாத சாமானிய மக்களுக்கு அரசு ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்தி சேவைகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் வரும் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு உடனடி தீர்வு செய்ய உள்ளனர்.
அதன்படி, அவினாசி தாலுகாவில் ஈட்டிவீரம்பாளையம் கிராமம், தாராபுரம் தாலுகாவில் நஞ்சதலையூர் கிராமம், காங்கயம் தாலுகாவில் ஆரத்தொழுவு கிராமம், மடத்துக்குளம் தாலுகாவில் காரத்தொழுவு கிராமம், திருப்பூர் வடக்கு தாலுகாவில் கணக்கம்பாளையம் கிராமம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் வேலம்பட்டி கிராமம், ஊத்துக்குளி தாலுகாவில் செங்கப்பள்ளி கிராமம் ஆகிய இடங்களில் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முகாம் நடக்கிறது.
பல்லடம் தாலுகாவில் சென்னிபாளையம் கிராமத்துக்கு அங்குள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தில் இ-சேவை மையத்திலும், உடுமலை தாலுகாவில் சிறப்பு கொண்டம்பட்டி கிராமத்துக்கு வேலாயுத கவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் முகாம் நடக்கிறது. பொதுமக்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம், புதிய கார்டு, நகல் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications